தமிழ்நாடு

"பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்ததாலேயே தோற்றோம்" : புலம்பிய சி.வி.சண்முகம்- பொங்கிய பாஜக- கூட்டணியில் சலசலப்பு!

பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்ததே அ.தி.மு.க தோல்விக்குக் காரணம் என சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

"பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்ததாலேயே தோற்றோம்" : புலம்பிய சி.வி.சண்முகம்- பொங்கிய பாஜக- கூட்டணியில் சலசலப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வி அடைந்தது. இதற்கு காரணம் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்ததுதான் என்ற பேச்சும் தொடர்ச்சியாக முணுமுணுக்கப்பட்டு வந்த நிலையில், அ.தி.மு.கவின் முக்கிய நிர்வாகி சி.வி.சண்முகமே தேர்தல் தோல்விக்கு பா.ஜ.கதான் காரணம் என பேசியிருப்பது பா.ஜ.க மற்றும் அ.தி.மு.கவிற்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் வானூரில் அ.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய சி.வி.சண்முகம், "சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.கவின் கூட்டணி கணக்கு சரியாக அமையவில்லை. பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்ததால் சிறுபான்மையினர் ஓட்டை முழுமையாக இழந்துவிட்டோம். இதுவே நமது தோல்விக்குப் பிரதான காரணம்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சி.வி.சண்முகத்தின் இந்தப் பேச்சுக்கு பா.ஜ.க தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். "உங்களால்தான் என்ற எண்ணம் உங்களிடமும் உண்டு" என ட்விட்டரில் பதிவிட்டு சி.வி.சண்முகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அதேபோல், பா.ஜ.கவின் எஸ்.ஆர்.சேகர், "சி.வி.சண்முகம் கருத்தை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஏற்கிறார்களா? பதில் சொல்ல வேண்டும். இல்லையெனில், நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓட்டுப் போட்ட மக்களை அவமானப்படுத்திய சி.வி.சண்முகம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து பா.ஜ.க மற்றும் அ.தி.மு.கவிற்குள் உள்ள கூட்டணி மோதல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மேலும் பா.ஜ.கவினர் மீது அ.தி.மு.கவினர் அதிருப்தியில் இருப்பதும் அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories