தமிழ்நாடு

ஒரே மாதத்தில் கோவிட் சங்கிலியை அறுத்தெரிந்து கட்டமைப்பை ஏற்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் - ஆவடி நாசர்

திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 90 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் தயாரிப்பு மையத்தை தமிழக பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் திறந்து வைத்து ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்கி வைத்தார்.

ஒரே மாதத்தில் கோவிட் சங்கிலியை அறுத்தெரிந்து கட்டமைப்பை ஏற்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் - ஆவடி நாசர்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே திரவ ஆக்சிஜன் சேமிப்பு கிடங்கு மூலம் ஆக்சிஜன் தாயாரிக்கப்பட்டு வழங்கபட்டு வரும் நிலையில் ஏ.சி.டி. கிராண்ட்ஸ் என்ற தனியார் நிறுவனம் மூலம் சுமார் 90 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் உற்பத்தி மையம் புதிதாக நிறுவப்பட்டது. இந்த ஆக்சிஜன் தயாரிப்பு மையத்தை தமிழக பால் வளத்துறை அமைச்சர் ஆவடி.சா.மு.நாசர் கலந்து கொண்டு ஆக்சிஜன் மையத்தை திறந்து வைத்து உற்பத்தியை தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து புதிதாக கட்டப்பட்டு வரும் திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரியின் கட்டுமானப் பணிகள் நடந்து வரும் நிலையில் அதனையும் அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆண்டே மருத்துவ படிப்பிற்கு மாணவர்கள் சேர்க்கை நடக்க விருப்பதால் கட்டுமானப் பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு விரைவில் கட்டுமானப் பணிகளை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

ஒரே மாதத்தில் கோவிட் சங்கிலியை அறுத்தெரிந்து கட்டமைப்பை ஏற்படுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் - ஆவடி நாசர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர் 3 வது அலை வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் திறமையும், உள்கட்டமைப்பையும் தமிழகம் முழுவதும் ஏற்படுத்தியுள்ள ஒரே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருவர்தான். கொரோனா சங்கிலியை அறுத்தெரிந்து இன்று தமிழ் நாட்டில் கொரோனாவை ஒரே மாதத்தில் கட்டுக்குள் கொண்டு வந்தவர் இந்தியாவிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒருவர்தான் என்றார்.

இந்த நிகழ்ச்சிகளின் போது மாவட்ட ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீஸ், மாவட்ட பொறுப்பாளர் எம்.பூபதி, சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன் மற்றும் மருத்துவத் துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

banner

Related Stories

Related Stories