தமிழ்நாடு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம்.. சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு!

மக்களின் நம்பிக்கைதான் உங்கள் அசாத்தியமான உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம் என சமூக வலைதளங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம்.. சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாட்டில் கொரோனா நெருக்கடி காலத்தில் ஆட்சி அமைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு, மக்களின் துன்பங்களை போக்கும் நடவடிக்கையாக பல்வேறு நல திட்டங்களை தொடர்ச்சியாக செய்து வருகிறது.

கொரோனா நிவாரண நிதி முதல் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் சீரிய முயற்சியோடு தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அதேநேரத்தில் ஊரடங்கு காலத்தில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த சிறு - குறு நிறுவனங்களுக்கு பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்து வருகிறது

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இத்தகைய நடவடிக்கைக்கு வாட்ஸ் ஆப் உள்ளீட்ட சமூக வலைதளங்கள் மூலம் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அதன்படி சமீபத்தில் வாட்ஸ் ஆப்பில் வெளியான பதிவு பின்வருமாறு:-

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு அளித்த பதிலுரையில் அறிவித்தபடி, சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் நோய்த்தடுப்பு மற்றும் ஆராய்ச்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனாவுக்குப் பிந்தைய நல்வாழ்வு மையத்தை (Post Covid Care Clinic) தாங்கள் திறந்து வைத்திருப்பது தமிழ்நாடு அரசின் சிறப்பான கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளின் பட்டியலில் ஒரு மைல்கல்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம்.. சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு!

இந்தியாவிலேயே முதல் மாவட்டமாக, நீலகிரியில் பழங்குடியினர், தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு 100% தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்த நீலகிரி ஆட்சியர் இன்னொசன்ட் திவ்யாவுக்கு தாங்கள் விருது வழங்கிப் பாராட்டியிருப்பது சிறப்பு.

இந்தச் சாதனை என்பது உட்கிராமங்கள் வரை கிளை பரப்பியுள்ள தமிழ்நாட்டின் பொது சுகாதாரக் கட்டமைப்பிற்கும், நீட் தேர்வுக்கு முன்பு வரை நம் மாநிலத்தின் எல்லாத் தரப்பிலிருந்தும் மருத்துவர்களை உருவாக்கிய நமது சமூக நீதிக் கட்டமைப்பிற்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

“அனைத்துப் பல்கலைக் கழகங்களிலும் எம்.ஃபில் படிப்பைத் தொடர முடிவு” என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு, ஒன்றிய அரசு மாநிலங்களின் மீது திணிக்க முயலும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான முக்கியமான நகர்வு. பல மாநிலங்களுக்கு இது முன்னுதாரணமாகத் திகழும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம்.. சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு!

“கிருஷ்ணகிரியில், 500 ஏக்கர் பரப்பளவில் உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மையம் அமையவுள்ளது; ஓலா நிறுவனம் அமைக்க உள்ள ஆலை மூலம் சுமார் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்!” என்ற மாண்புமிகு தொழிற்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பு வேலைவாய்ப்பை எதிர்பார்த்து கழகத்திற்கு வாக்களித்த இளைஞர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

உங்கள் தலைமையில் தமிழ்நாடு மீண்டும் வளர்ச்சிப் பாதையில் திரும்பியிருக்கிறது என்ற நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. மக்களின் அந்த நம்பிக்கைதான் உங்கள் அசாத்தியமான உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரம்!” எனத் தெரிவித்துள்ளன.

banner

Related Stories

Related Stories