தமிழ்நாடு

"தமிழ்நாட்டில் இன்று மதியத்திற்குள் தடுப்பூசி இருப்பு தீர்ந்துவிடும்" : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

தமிழ்நாட்டில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில்தான் அதிக நபர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

"தமிழ்நாட்டில் இன்று மதியத்திற்குள் தடுப்பூசி இருப்பு தீர்ந்துவிடும்" : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்களுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் திறக்கப்பட்டுள்ளது. இம்முகாமினை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், எம்.எம்.சுந்தரேசன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

பின்னர் செய்திளார்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் தொடர் முகாம்கள் நடத்தி அனைவருக்கும் தடுப்பூசி போடும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.

தேயிலைத் தோட்ட பணியாளர்களுக்கும் பழங்குடியினருக்கும் நேரடியாகச் சென்று தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த பத்து நாட்களில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தேயிலைத் தோட்டப் பணியாளர்களும் 100% தடுப்பு ஊசி போட்டுக்கொள்ளும் பணி நிறைவடையும்.

தமிழ்நாட்டில் அதிகம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்ட சட்டமன்றத் தொகுதியாக சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி அமைந்துள்ளது. சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் இதுவரை 90,000 பேர் தடுப்பு ஊசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் ஆர்வத்துடன் இருந்தாலும், அவர்களுக்கு செலுத்த தடுப்பூசி இல்லை என்பது வருத்தமாக உள்ளது. தற்போது வெறும் 2 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளது. தமிழ்நாட்டில் இன்று பகல் 12 மணிக்கள் அனைத்து தடுப்பூசிகளும் தீர்ந்துவிடும். மேலும் சென்னையில் தடுப்பூசி இல்லாததால் சிறப்பு முகாம்கள் நிறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசிகளை ஒன்றிய அரசு வழங்கியதும் தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories