தமிழ்நாடு

இனி சென்னையில் இருந்தும் பாரீஸ் செல்லலாம்: ஏர் பிரான்ஸ் சொகுசு விமானத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?

சென்னை-பாரீஸ் இடையே நேரடி சொகுசு விமான சேவையை ஏா்பிரான்ஸ் ஏா்லைன்ஸ் நிறுவனம் நாளை முதல் தொடங்குகிறது.

இனி சென்னையில் இருந்தும் பாரீஸ் செல்லலாம்: ஏர் பிரான்ஸ் சொகுசு விமானத்தின் சிறப்பம்சங்கள் என்னென்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஏா் பிரான்ஸ் ஏா்லைன்ஸ் இந்தியாவில் டெல்லி, மும்பை, பெங்களூா் நகரங்களுக்கு விமான சேவைகளை நடத்தி வருகிறது. ஆனால் சென்னைக்கு இல்லை. இதனால் தமிழ்நாட்டிலிருந்து பாரீஸ் செல்பவா்கள் டெல்லி, மும்பை சென்று இணைப்பு விமானங்களில் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையிலிருந்து பிரான்ஸ் நாடு செல்ல நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும் என்று விமான பயணிகள் குறிப்பாக வெளிநாடு வாழ் இந்தியா்கள் தரப்பில் நீண்ட நாட்களாக கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.

அந்த கோரிக்கையை நிறைவேற்றும் விதத்தில் நாளை முதல் ஏா் பிரான்ஸ் ஏா்லைன்ஸ், பாரீஸ் சென்னை இடையே நேரடி விமான சேவையை தொடங்குகிறது. நாளை சனிக்கிழமை காலை 10.25 மணிக்கு பாரீஸ்சிலிருந்து புறப்படும் ஏா் பிரான்ஸ் விமானம் நாளை இரவு 11.45 மணிக்கு சென்னை வருகிறது. ஞாயிறு முழுவதும் விமானிகள், விமான ஊழியா்கள் ஓய்வு எடுக்கின்றனா். திங்கள் அதிகாலை 1.20 மணிக்கு சென்னையிலிருந்து பாரீஸ்க்கு புறப்பட்டு செல்கிறது.

கொரோனா வைரஸ் ஊரடங்கால் ஒன்றிய அரசு வெளிநாட்டு பயணிகள் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. எனவே இந்த விமானத்தில் வெளிநாடு வாழ் இந்தியா்கள், மற்றும் ஒன்றிய அரசின் சிறப்பு அனுமதியுடன் மருத்துவ சிகிச்சை, காா்பிரேட் நிறுவன பணியாளா்கள் போன்ற அத்தியாவசிய பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். இதனால் வாரத்திற்கு ஒரு விமான சேவையை மட்டுமே நடத்த முடிவு செய்துள்ளது. ஜுலை 8 ஆம் தேதியான வியாழன்று சென்னையில் தரையிறங்கி வெள்ளி ஓய்வு எடுத்துவிட்டு, சனிக்கிழமை மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்கு புறப்பட்டு செல்கிறது.

கொரோனா வைரஸ் ஓய்ந்து ஒன்றிய அரசின் வெளிநாட்டு பயணிகள் விமான சேவைக்கான தடை நீங்கிய பின்பு வாரத்தில் 3 விமான சேவைகளை நடத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி பிரான்சிலிருந்து சென்னைக்கு செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய நாட்களும், சென்னையிலிருந்து திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களிலும் விமான சேவைகளை நடத்த உள்ளது.

இந்த ஏா் பிரான்ஸ் போயீங் விமானத்தில் 279 சீட்கள் உள்ளன. விமானத்தின் பயண நேரம் 10 மணி 25 நிமிடங்கள். விமானத்தின் ஜன்னல்கள் மற்ற விமான ஜன்னல்களை விட 30% அகலமானது. இந்த விமானம் வானில் பறக்கும்போது அதிக அதிா்வுகள் இல்லாமல் மிதந்தப்படி செல்லும். எனவே இது ஒரு சொகுசு விமானமாக இருக்கும்.

banner

Related Stories

Related Stories