தமிழ்நாடு

நினைவு திறனால் சாதனை: 2 வயதில் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பெற்ற சென்னை சிறுவன்!

இந்தியா புக் ஆஃப் ரொக்கார்டு சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற சென்னையைச் சேர்ந்த இரண்டு வயது சிறுவன்.

நினைவு திறனால் சாதனை: 2 வயதில் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பெற்ற சென்னை சிறுவன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னையில் இரண்டு வயது சிறுவன் 20 வகையான பொருட்களின் பெயர்களைக் கூறி புக் ஆப் ரெக்கார்ட்டில் இடம்பெற்றது பாராட்டைப் பெற்றுள்ளது.

சென்னை இராயபுரம் உசேன் மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் ரகுலன். தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு ஜீவிதா என்ற மனைவியும் கிர்ஷோவ் சாய் என்ற 2 வயது மகனும் உள்ளனர்.

இந்நிலையில் மகன் கிர்ஷோவ் சாய் அறிவுக் கூர்மையால் ஞாபக சக்தி திறன் அதிகமாக உள்ளதால் அனைத்தையும் எளிதில் நினைவுபடுத்தி கூறும் ஆற்றல் பெற்றுள்ளார். உலக நாடுகள் தலைவர்கள் நிறங்கள் வடிவங்கள் என 20-க்கும் மேற்பட்ட வகைகளில் பெயர்களை கூறி சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார்

நினைவு திறனால் சாதனை: 2 வயதில் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பெற்ற சென்னை சிறுவன்!

இரண்டே வயதே ஆன கிர்ஷோவ் சாய் உலக நாடுகளின் தேசியக் கொடிகளின் பெயர்கள், உலக தலைவர்களின் பெயர்கள், 16 வகையான பழங்கள், 21 வகையான வாகனங்கள், 15 வகையான காய்கறிகள், பறவைகள், விலங்குகள், நிறங்கள், வடிவங்கள், எழுத்து வகைகள், உணவு வகைகள், வார நாட்கள் ஒன்று முதல் பத்து 10 வரை எண்கள் ஆங்கில ரைம்ஸ், திருக்குறள், ஆத்திச்சூடி என அனைத்தையும் சொல்லி அசத்தி வருகிறார்.

இவரது புத்திக் கூர்மையும் ஞாபக திறனையும் அவரது பெற்றோர்கள் செல்போனில் பதிவு செய்து இந்தியா புக் ஆஃப் ரொக்காடு சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக அனுப்பியுள்ளனர்.

கொரொனா நோய்த்தொற்று ஊரடங்கினால் வீட்டிற்கு வர முடியாத புக் ஆப் ரெக்கார்ட் சாதனையாளர்கள் செல்போன் மூலம் இவரது பதிவுகளை ஆய்வு செய்து அவரது சாதனையை பாராட்டி புத்தகத்தில் பெயரை பதிவு செய்துள்ளனர். மேலும் இவரது சாதனையை பாராட்டி புக் ஆப் ரெக்கார்ட் விருது வழங்கி உள்ளது.

இரண்டே வயதேயான சிறுவன் அனைத்தையும் நினைவுக்கூர்ந்து பெயர்களைக் கூறி சாதனை படைத்து புத்தகத்தில் இடம் பெற்றிருப்பது அப்பகுதி மக்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories