தமிழ்நாடு

தலைமறைவான யூடியூபர் ‘பப்ஜி’ மதன்... மனைவியை கைது செய்து விசாரிக்கிறது போலிஸ்!

யூடியூபர் மதனின் மனைவியை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் கைது செய்துள்ளனர்.

தலைமறைவான யூடியூபர் ‘பப்ஜி’ மதன்... மனைவியை கைது செய்து விசாரிக்கிறது போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

யூடியூபில் மிகவும் பிரபலமான கேமரான மதன் மீது புளியந்தோப்பு சைபர் கிரைம் போலிஸில் புகார் அளிக்கப்பட்டு, அவர் தலைமறைவான நிலையில், அவரது மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.

பப்ஜி, ஃப்ரீ பயர் உள்ளிட்ட விளையாட்டுகளுக்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். பப்ஜி விளையாட்டு சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை மன அழுத்தம், வன்மம் நோக்கித் தள்ளிவிடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தியாவில் இந்த விளையாட்டு தடை செய்யப்பட்டாலும், வி.பி.என் மூலம் இன்னும் இந்த விளையாட்டு ரகசியமாக புழக்கத்தில் இருப்பதாக புகார்கள் எழுகின்றன.

அதே நேரத்தில் பப்ஜிக்கு மாற்றாக ஃப்ரீ பயர் எனும் விளையாட்டு அதிகமாகத் தரவிறக்கம் செய்யப்படுகிறது. இந்த விளையாட்டுகளில் அடுத்தடுத்த லெவலுக்கு முன்னேறி அதனை வீடியோவாக யூ டியூபில் பதிவிட்டு வருபவர் மதன்.

முகத்தைக் காட்டாமல் தன்னுடைய குரலை மட்டும் பதிவிட்டு அந்த வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் செய்யும் அவர் தலைப்பிலேயே 18+ என்று பதிவிட்டு ஆபாச வார்த்தைகளை அள்ளித் தெளித்து வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தன்னுடன் சாட் செய்யும் பெண்களை இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அழைத்து ஆபாச வீடியோ கால் செய்ய முயற்சித்துள்ளார்.

இதுதொடர்பாக புளியந்தோப்பு சைபர் கிரைம் போலிஸாருக்கு புகார் வந்ததை அடுத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மதன் மீது புகார்கள் குவிந்தன.

புளியந்தோப்பு காவல் நிலையத்தில் இருந்து மத்திய குற்றப்பிரிவுக்கு வழக்கு மாற்றப்பட்டது. தற்போது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் மதன் மீது பெண்களை ஆபாசமாகச் சித்தரித்துப் பேசுதல், ஆபாசமாகப் பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மத்திய குற்றப்பிரிவு போலிஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில் மதன் தலைமறைவானார். இந்நிலையில் மதனின் மனைவியை மத்திய குற்றப்பிரிவு போலிஸார் கைது செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories