தமிழ்நாடு

“சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்பிய யூ-டியூபர் கிஷோர் கே சாமி கைது” : காவல்துறை அதிரடி நடவடிக்கை!

சமூக ஊடகங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை இழிவான வகையில் அவதூறு செய்து வரும் கிஷோர் கே சுவாமியை போலிஸார் கைது செய்துள்ளனர்.

“சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்பிய யூ-டியூபர் கிஷோர் கே சாமி கைது” : காவல்துறை அதிரடி நடவடிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சமூக வலைதளங்களில் பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க-விற்கு ஆதரவாக பதிவிட்டு வருபவர் கிஷோர் கே சுவாமி. இவர் சமுக வலைதளங்களில் தமிழ்நாட்டு முன்னாள் முதலமைச்சர்களான பேரறிஞர் அண்ணா, கலைஞர் மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பத்திரிகையாளர்கள் , ஊடகங்கள் மீது அப்பட்டமான அறுவெறுக்கத்தக்க வகையில் கருத்து பதிவிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிசந்திரன் கடந்த 10 ம் தேதி கிஷோர் கே சுவாமியை கைது செய்யகோரி புகார். புகாரின் பேரில் சங்கர் நகர் போலிஸார் கிஷோர் கே சாமி மீது 153- கலகத்தை விளைவிக்கும் உட்கருத்தோடு செயல்படுதல், 505(1)( b)- அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக ஒரு குற்றத்தை செய்ய தூண்டுதல், 505( 1) (c) - ஒவ்வொரு வகுப்பு அல்லது சமூகத்தை வேறு சமூகத்துக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுதல் என 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து கிஷோர் கே.சாமியை 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க தாம்பரம் கிளை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து சைதாபேட்டை சிறையில் கிஷோர் கே சாமி அடைக்கப்பட்டார். மேலும், 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து பரப்பிய யூ-டியூபர் கிஷோர் கே சாமி கைது” : காவல்துறை அதிரடி நடவடிக்கை!

முன்னதாக கடந்தாண்டு ஊடகத்துறை பெண்கள் மற்றும் பெண் செயல்பாட்டாளர்களை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதாக பெண் ஊடகவியலாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், சென்னை காவல் துறை 29.07.2020 அன்று வழக்கு பதிவு செய்து கைது செய்தது.

இதை தாங்க முடியாத பா.ஜ.க தேசிய செயலர் எச்.ராஜா மற்றும் அ.தி.மு.க அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், ஆர்.பி.உதயகுமார் மற்றும் ராஜேந்திர பாலாஜி போன்றோர் காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்து கிஷோர் கே சாமியை சில மணி நேரங்களிலேயே விடுதலை செய்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories