தமிழ்நாடு

இதுவரை 1 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன... கொரோனாவை வெல்லத் தயாராகும் தமிழ்நாடு!

தமிழ்நாட்டில் செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளது.

இதுவரை 1 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன... கொரோனாவை வெல்லத் தயாராகும் தமிழ்நாடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழ்நாட்டில் செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 3,26,573 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு இதுவரை மொத்தமாக 1,10,40,230 தடுப்பூசிகள் வந்துள்ள நிலையில் அதில் இன்று வரை 1,01,30,594 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் ஒதுக்கீட்டின் கீழ் கோவிஷீல்டு - 76,63,150 டோஸ் மற்றும் கோவாக்சின் - 16,6,810 டோஸ் என மொத்தமாக 92,69,960 டோஸ் தடுப்பு மருந்துகள் பெறப்பட்டன.

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான தமிழ்நாடு அரசின் நேரடிக் கொள்முதல் திட்டத்தின் கீழ் கோவிஷீல்டு - 11,18,530 டோஸ் மற்றும் கோவாக்சின் - 2,76,740 டோஸ் என மொத்தம் 13,95,270 டோஸ் தடுப்பு மருந்துகள் பெறப்பட்டன.

ஒட்டுமொத்தமாக கோவிஷீல்டு - 8,781,680 டோஸ் மற்றும் கோவாக்சின் - 18,82,550 டோஸ் என 1,10,40,230 டோஸ் தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளன. இவற்றில், இதுவரை 1,01,30,594 டோஸ் தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் கடந்த ஒரு வார காலமாக தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வந்தது. தமிழ்நாடு முதலமைச்சரின் தொடர் கோரிக்கைகள் காரணமாக கடந்த 3 நாட்களில் அதிகளவிலான தடுப்பூசிகள் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளன.

இன்று ஒரே நாளில் மட்டும் 3,26,573 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதன்படி தடுப்பூசி தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரையிலும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே ஒரு லட்சத்தை எட்டியுள்ளது.

தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்துள்ளது.

மேலும், ஜூன் மாத நிலவரப்படி தமிழ்நாட்டிற்கு ஒன்றிய அரசின் ஒதுக்கீடு மற்றும் தமிழ்நாடு அரசின் நேரடி கொள்முதல் திட்டத்தின் கீழ் 42.58 லட்சம் டோஸ் தடுப்பு மருந்துகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் பல்வேறு கட்டங்களாக தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories