தமிழ்நாடு

மாணவர்களின் எதிர்காலம் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு உடல்நலமும் முக்கியம்: அன்பில் மகேஷ் பேட்டி!

12ம் வகுப்புத் தேர்வுகுறித்து நாளை மறுதினம் முதலமைச்சர் முடிவு அறிவிப்பானர் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் எதிர்காலம் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு உடல்நலமும் முக்கியம்: அன்பில் மகேஷ் பேட்டி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 98வது பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் கழகத் தலைவர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க திருச்சி மாவட்ட கழக அலுவலகத்திற்கு அருகில் மரக்கன்றுகளை நட்டு வைத்து, முன் களப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், “இரண்டு நாட்களில் கல்வியாளர்கள், பெற்றோர் நலச் சங்கத்தினர், ஆசிரிய அமைப்புகள், மருத்துவ நிபுணர் குழு, தோழமை கட்சியினரின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டு இரண்டு நாட்களில் தெரிவிக்குமாறு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தின் ஒட்டு மொத்த கருத்தின் அடிப்படையில் ஆலோசனை செய்து, நாளை மாலை 4 மணிக்குச் சென்னையில் காணொலி காட்சி மூலமாக CEO, DEO மற்றும் கல்வியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. பின்னர். நாளை மறுநாள் காலை முதலமைச்சரிடம் அனைத்து கருத்துக்களும் தெரிவிக்கப்படும். இதன் அடிப்படையில் தமிழக முதல்வர் இறுதி முடிவை எடுப்பார்.

கிராமப்புற மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் மற்றும் தொலைப்பேசி எண்ணைப் பயன்படுத்தித் தெரிவிக்கலாம்.

ஏற்கனவே பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்கு எப்படி மதிப்பெண் கொடுக்க வேண்டும் என முடிவு எடுத்தோமோ அதை போல பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சியும் நல்ல முறையில் மதிப்பெண் கொடுக்கப்படும் என பிரதமர் சொல்லி இருக்கிறார்? அது எந்த முறையில் என தெரியவில்லை. ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பலரும் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்றுதான் தெரிவித்தனர்.

ரமேஷ் போக்ரியால் அனுப்பிய கடிதத்தில் கூடதேர்வுகளை எப்படி நடத்தலாம் என்று தான் கருத்து கேட்டார்களே தவிர தேர்வு ரத்து செய்வது குறித்து எந்த கருத்தும் கேட்கவில்லை. ஆனால், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு சி.பி.எஸ்.சி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். முதல்வர் சொன்னபடி மாணவர்களின் எதிர்காலம் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு உடல் நலமும் முக்கியம்.

கொரோனா காலம், 12ம் வகுப்பு தேர்வு குறித்து தற்போது ஆலோசனை செய்து வரும் நிலையில், பள்ளிகள் திறக்கப்படும் சமயத்தில், கடந்த 2013, 2017, 2018ஆம் ஆண்டு, 'டெட்' தேர்வு எழுதிக் காத்திருப்பவர்களுக்குப் பணி வழங்குவது குறித்தும் பரிசீலனை செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories