தமிழ்நாடு

“விரைவில் கொரோனா நோயாளிகளே இல்லாத நிலை உருவாகும்”: அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை!

தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று வேகமாகக் குறைந்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

“விரைவில் கொரோனா நோயாளிகளே இல்லாத நிலை உருவாகும்”: அமைச்சர் மா.சுப்பிரமணியன் நம்பிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டி களை தனியார் நிறுவனங்கள் சார்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் தொற்று பாதிப்பு எண்ணிக்கையை விட குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது. அதேபோல் கொரோனா தொற்றும் வேகமாகக் குறைந்து வருகிறது.

முதலமைச்சர் எடுத்த தீவிர நடவடிக்கையால், தமிழகத்தில் தொற்று சரிவு ஏற்பட்டுள்ளது. தொற்று குறைந்து வருவதன் மூலம் மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் 25,134 படுக்கைகள் காலியாக உள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளே இல்லாத நிலை மிக விரைவில் உருவாகம். அதேபோல் கொரானா தடுப்பூசிகளும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும்" என்றார்.

banner

Related Stories

Related Stories