தமிழ்நாடு

“உணவின்றி தவிக்கும் தெருவோர வாசிகளுக்கு சொந்த செலவில் உணவு வழங்கிய பெண் காவலர்” : குவியும் பாராட்டு!

திருவாரூரில், ஆதரவற்றவர்களுக்கு தனது சொந்த செலவில் மதிய உணவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கி வரும் சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“உணவின்றி தவிக்கும் தெருவோர வாசிகளுக்கு சொந்த செலவில் உணவு வழங்கிய பெண் காவலர்” : குவியும் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று மிக வேகமாகப் பரவி வரும் நிலையில், இதனைக் கட்டுப்படுத்துவதற்குத் தமிழகத்தில் தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வருமானம் இன்றி வாழ்வாதாரம் இழந்துள்ள தெருவோரங்களில் வசிப்பவர்கள் மற்றும் ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு கிடைக்கத் தமிழக அரசும், தன்னார்வலர்களும் பல்வேறு முயற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி என்பவர் திருவாரூர் பெரிய கோவில், கமலாலய குளம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் ஆதரவற்றவர்களுக்குத் தனது சொந்த செலவில் தனது குடும்பத்தினருடன் இனைந்து மதிய உணவு வழங்கினார்.

காவல்துறையினர் பொது மக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டுமெனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ள நிலையில், அதனை மெய்ப்பிக்கும் விதமாக திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி காவல்துறை சீருடை அணியாமல், காவலர்கள் பாதுகாப்பு பந்தோபஸ்து இல்லாமல், தனியாக தனது குடும்பத்தினருடன் சாதாரண மக்களைப் போல ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கிய சம்பவம் அங்கிருந்தவர்களை ஆச்சரியப்பட வைத்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பலரும் கயல்விழியை பாராட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories