Corona Virus

கொரோனா வார்டில் நோயாளிகளை நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - வீடியோ

நாட்டிலேயே முதல் முறையாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கொரோனா நோயாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கொரோனா வார்டில் நோயாளிகளை நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - வீடியோ
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை முதல் ஆய்வு மேற்கொண்டு வந்தார்.

அதன் தொடர்ச்சியாக கோவையில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் ஆய்வு செய்தார். இந்தியாவிலேயே முதல் முறையாக கோவையில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவச உடை அணிந்து கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சென்று நலம் விசாரித்தார்.

முன்னதாக கோவை மாநகராட்சியில் தலா 10 கார் ஆம்புலன்சுகள் வீதம், 50 கார் ஆம்புலன்சுகளை தமிழக முதல்வர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் இராமச்சந்திரன், கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி சித்திக், மாவட்ட ஆட்சியர் நாகராஜ், மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமான நா.கார்த்திக், கோவெ புறநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், ஏடிஜிபி தாமரை கண்ணன், காவல்துறை ஆணையாளர் பிரதீப் தாமோதர் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

banner

Related Stories

Related Stories