தமிழ்நாடு

“கோவையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு - மக்களுக்காக தி.மு.க துணை நிற்கும்” : அமைச்சர் அர.சக்கரபாணி

கோவையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று முதல் இலவச உணவு வழங்கப்படும் என அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

“கோவையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு - மக்களுக்காக தி.மு.க துணை நிற்கும்” : அமைச்சர் அர.சக்கரபாணி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் வேகம் சற்று குறைந்தாலும், கோவை, மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த மாவட்டங்களிலும் தொற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக 4 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா தொற்று பதிவாகி வருகிறது. மேலும் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் நடைபாதைவாசிகள் மற்றும் ஏழை மக்களுக்கு உணவு கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதைப் போக்கும் விதமாக கோவை மாவட்டத்தில் உள்ள 15 அம்மா உணவகங்களிலும் இன்று முதல் இலவச உணவு வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,"கோவையில் செயல்பட்டு வரும் 15 அம்மா உணவகங்களில் இன்று முதல் தொற்று கட்டுப்படுத்தப்படும் காலம் வரை உணவு விலையின்றி வழங்கப்படும். அதற்கான செலவினத் தொகையை தி.மு.க ஏற்றுக்கொள்ளும். இதன்மூலம், ஏழை எளியோர், நடைபாதை வாசிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினசரி பயன்பெறுவர்.

நாளும் நன்றே செய்வோம் என்ற அடிப்படையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களது ஆட்சியைப் போலவே, அவரது தலைமையிலான தி.மு.கவும் மக்கள் நலனையே முதன்மையாகக் கொண்டு இயங்கி வருகிறது. கடுமையான காலத்தை கடந்திட, திமுகவும் மக்களுக்கு துணை நிற்கும்" எனப் பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories