தமிழ்நாடு

“நள்ளிரவில் உதவிகோரியவருக்கு உடனே உதவிய முதலமைச்சர்” : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ‘India Today’ புகழாரம்!

“நள்ளிரவில் உதவிகோரியவருக்கு உடனே உதவிய முதலமைச்சர்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு “இந்தியா டுடே’ புகழாரம் சூட்டியுள்ளது.

“நள்ளிரவில் உதவிகோரியவருக்கு உடனே உதவிய முதலமைச்சர்” : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ‘India Today’ புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“நள்ளிரவில் உதவிகோரியவருக்கு உடனே உதவிய முதலமைச்சர்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு “இந்தியா டுடே’ புகழாரம் சூட்டியுள்ளது.

இதுதொடர்பாக இந்தியா டுடே (31.5.2021) ஆங்கில வார ஏட்டில் வந்துள்ள பெட்டிச் செய்தி வருமாறு:-

தமிழக அரசின் கோவிட்19 ஹெல்ப் லைனுக்கு அர்ச்சனா பத்மாகர் என்பவர் தொலைபேசியில் பேசிய போது, எதிர்முனையில் அவருக்குப் பதிலளித்துப் பேசியவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்று கூறியதால் அவர் குழப்பமடைந்துவிட்டார்.

யாரேனும் குறும்புத்தனமாக இவ்வாறு பேசுகிறார்களோ என்று சந்தேகப்பட்ட அர்ச்சனா பத்மாகர், மீண்டும் அந்த தொலைபேசி (ஹெல்ப் லைன்) எண்ணுக்குத் தொடர்பு கொண்டபோது, உண்மையிலேயே அது முதலமைச்சரின் குரல் தான் என்று அவருக்குத் தெரியவந்தது.

அந்த நள்ளிரவு நேரத்தில், எந்தவித முன்னறிவிப்புமின்றி, அந்தக் கட்டளை அறைக்கு (வார்ரூம்) முதலமைச்சர் வந்திருந்தார். பத்மாகர் உறவினருக்கு அவர் கேட்கும் கொண்டபடி, மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கை ஏற்பாடு செய்யப்படும் என்று முதலமைச்சர் அப்போது உறுதி அளித்தார்.

அடுத்த அரை மணி நேரத்தில் அந்த நோயாளியை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, ஆம்புலன்ஸ் வாகனம் அங்கே வந்துவிட்டது. மு.க.ஸ்டாலின் ரசிக மன்றங்கள் வளர்கின்றன.

banner

Related Stories

Related Stories