தமிழ்நாடு

“கொரோனாவால் பலியான போலிஸார் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு”- முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

கொரோனாவால் உயிரிழந்த காவல்துறையினரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

“கொரோனாவால் பலியான போலிஸார் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு”- முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த போலிஸாரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் உதவித்தொகை வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா தடுப்புப் பணியில் முன்களப் பணியாளர்களாகப் பணியாற்றுவோர் பலர் கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். காவல்துறையினரில் பலரும் கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பணியில் ஈடுபட்டு உயிரிழந்த மருத்துவர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே, கொரோனா காலப் பாதுகாப்புப் பணியில் உயிர்த் தியாகம் செய்த காவல்துறையினரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ. 25 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் கோவிட்-19 நோய்த்தொற்று பரவுதலைத் தடுக்கும் விதத்தில் அரசுத் துறையைச் சார்ந்த அலுவலர்கள் தீவிரமாகப் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் பணியின் மூலமாக நோய்த்தொற்று ஏற்பட்டு தங்கள் இன்னுயிரை இழந்திருக்கிறார்கள். முக்கியமாக தமிழக காவல்துறையில் இதுவரை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உட்பட 84 நபர்கள் தங்களுடைய இன்னுயிரை இழந்துவிட்டார்கள்.

இதுவரை தங்கள் இன்னுயிரினை இழந்தவர்களின் 13 நபர்களின் குடும்ப வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.3.25 கோடி நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 71 நபர்களில் 36 நபர்களுக்கான முன்மொழிவுகள் பெறப்பட்டு அவர்களுக்குத் தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.9 கோடியை நிவாரணத் தொகையாக வழங்க முதல்வரால் உத்தரவிடப்பட்டுள்ளது.

எஞ்சியுள்ள 35 நபர்களுக்கான முன்மொழிவுகள் பெறப்பட்டவுடன் பரிசீலித்து அவர்களுக்கும் தலா ரூ.25 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories