தமிழ்நாடு

கிராம மக்கள் எதிர்ப்பு.. கொரோனாவால் உயிரிழந்த மகளின் உடலை வாங்க மறுத்த தந்தை - சேலத்தில் நடந்த கொடுமை!

கொரோனாவுக்கு பலியான மகளின் உடலை, அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு வரும் என்பதால், மருத்துவமனையிலிருந்து உடலை வாங்கத் மறுத்த கொடுமை சேலத்தில் அரங்கேறியுள்ளது.

கிராம மக்கள் எதிர்ப்பு.. கொரோனாவால் உயிரிழந்த  மகளின் உடலை வாங்க மறுத்த தந்தை - சேலத்தில் நடந்த கொடுமை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியா முழுவதும் கொரோனா பெருந்தொற்று மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சில இடங்களில் மனித நேயத்துடன் பல்வேறு சம்பவங்களும் நடந்தாலும், கொத்து கொத்தாக உயிர்கள் மடிந்து வருவதால் மக்களின் மனமும் கொஞ்சம் கொஞ்சமாகக் கல்லாகி வருகிறது.

சேலம் மாவட்டம், பவளத்தானுர் பகுதியில் அகதிகள் முகாம் ஒன்று உள்ளது. அங்குள்ள பெண் ஒருவருக்கு கடந்த வாரம் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பிறகு அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா சிகிச்சை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில், அந்தப் பெண் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்வதற்காகத் தந்தையிடம் உடலை மருத்துவமனை நிர்வாகம் கொடுத்துள்ளது. அப்போது அவர், “கொரோனா தொற்றால் தனது மகள் உயிரிழந்ததால், உடலை தாரமங்கலம் பகுதியில் அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். எனவே உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்ய முடியாது. அதனால் உடலை வாங்க மாட்டேன்; நீங்களே அடக்கம் செய்து விடுங்கள்” என கூறியுள்ளார்.

இதையடுத்து மருத்துவர்கள், பெண்ணின் தந்தையிடம், “உடலை அடக்கம் செய்வதால் எந்த பாதிப்பும் வராது; ஊர்மக்கள் எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டார்கள்” என விளக்கம் கூறியுள்ளனர். இதையடுத்து நேற்று காலை சடலத்தைப் பெற்றுக் கொண்ட பெண்ணின் தந்தை, சேலத்தில் உள்ள மயானத்தில் தகனம் செய்தனர். பெற்ற மகளின் சடலத்தை தந்தை வாங்க மறுத்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories