தமிழ்நாடு

#ELECTIONRESULTS |மதுரையில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை! #DMK4TN

மதுரை மாவட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர்.

#ELECTIONRESULTS |மதுரையில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை! #DMK4TN
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. இந்நிலையில் நாடே தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை விருவிருப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவு காலை 8 மணிக்கு துவங்கியதிலிருந்தே தி.மு.க வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர். அந்த வகையில், மதுரை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றனர்.

மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் கோ. தளபதி 3121 வாக்குகள் வெற்று முன்னிலையில் உள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் சரவணன் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலை வகித்து வருகிறார். மதுரை மேற்கு தொகுதி முதல் சுற்றில், தி.மு.க சின்னம்மாள் 2830 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்ட சி.பி.ஐ(எம்) வேட்பாளர் பொன்னுத்தாய் 2505 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அதேபோல், விளாத்திக்குளம் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் மார்கண்டேயன் 11992 வாக்குகள் பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

பத்மனாபுரம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க வேட்பாளர் மனோ தங்கராஜ் 1069 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். திருவாடானை சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கரு மாணிக்கம், அ.தி.மு.க வேட்பாளர் கே.சி. ஆணிமுத்துவை விட 3522 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.

ராதாபுரம் தொகுதி தி.மு.க வேட்பாளர் அப்பாவு 560 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். அதேபோல் தூத்துக்குடி மாவட்ட திருச்செந்தூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் 5477 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

banner

Related Stories

Related Stories