தமிழ்நாடு

“வொய்ட் வாஷ்” - சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை முழுமையாக கைப்பற்றும் தி.மு.க!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர்.

“வொய்ட் வாஷ்” - சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை முழுமையாக கைப்பற்றும் தி.மு.க!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான சட்டமன்றப் பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெகுமக்களின் அமோக ஆதரவுடன் தேர்தலைச் சந்தித்தது.

வாக்குப்பதிவு நிறைவடைந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி 163 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அ.தி.மு.க 70 இடங்களில் முன்னிலையில் வருகிறது. இதனடிப்படையில் பார்த்தால் தி.மு.க ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.

மேலும் தலைநகர் சென்னையையும் தி.மு.க வேட்பாளர்கள் வெற்றி பெற்று முழுமையாக கைப்பற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க வேட்பாளர்கள் தொடர்ந்து பெறுவாரியான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்து வருகின்றனர்.

தாம்பரம் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜா 10,028 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். செங்கல்பட்டு தொகுதியில் வரலட்சுமி மதுசூதனன் 15,575 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

அதேபோல், திருவள்ளூர் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் 87,853 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். காஞ்சிபுரம் தொகுதியில் சி.வி.எம்.பி.எழிலரசன் 8,660 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

banner

Related Stories

Related Stories