திமுக அரசு

பாதாளத்தில் வீழ்ந்த அ.தி.மு.க அமைச்சர்கள்... மக்களை ஏமாற்ற நினைத்தால் இதுதான் கதி! #ElectionResults

“மோடி எங்கள் டாடி” எனக் கூறிய ராஜேந்திர பாலாஜி இராஜபாளையம் தொகுதியில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

பாதாளத்தில் வீழ்ந்த அ.தி.மு.க அமைச்சர்கள்... மக்களை ஏமாற்ற நினைத்தால் இதுதான் கதி! #ElectionResults
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தமிழகத்தின் 234 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான சட்டமன்றப் பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெகுமக்களின் அமோக ஆதரவுடன் தேர்தலைச் சந்தித்தது.

வாக்குப்பதிவு நிறைவடைந்து 26 நாட்கள் ஆன நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பெரும்பான்மையான தொகுதிகளில் தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் அதிக வாக்குகளுடன் முன்னிலை வகித்து வருகின்றனர்.

அ.தி.மு.க-வின் மூத்த அமைச்சர்கள் பலரும் தோல்வி முகம் காட்டி வருகின்றனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இழுபறியைச் சந்தித்து வருகிறார்.

“மோடி எங்கள் டாடி” எனக் கூறிய ராஜேந்திர பாலாஜி இராஜபாளையம் தொகுதியில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

பா.ஜ.க-வின் கொள்கை பரப்புச் செயலாளராகவே செயல்பட்டு வந்த மாஃபா பாண்டியராஜன், ஆவடி தொகுதியில் தி.மு.க வேட்பாளர் ஆவடி நாசரிடம் தோல்வி முகம் காட்டி வருகிறார்.

இராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் பெரும் பின்னடைவைச் சந்தித்து வருகிறார். கிட்டத்தட்ட அவரது தோல்வி உறுதியாகியுள்ளது.

ஜோலார்பேட்டை தொகுதியில் அமைச்சர் கே.சி.வீரமணி பின்னடைவைச் சந்தித்து வருகிறார். விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தோல்வி உறுதிசெய்யப்பட்டுள்ளது.

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட வெல்லமண்டி நடராஜன் தி.மு.க வேட்பாளர் இனிகோ இருதயராஜை விட 16 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பின்தங்கியுள்ளார்.

மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பெஞ்சமின் தி.மு.க வேட்பாளரை விட 9 ஆயிரம் வாக்குகள் பின்தங்கியுள்ளார். கடலூர் தொகுதியில் அமைச்சர் எம்.சி.சம்பத் பின்தங்கியுள்ளார்.

ஆலந்தூரில் வளர்மதி தோல்வி முகம் கண்டு வருகிறார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட 34.156 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வேட்பாளர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகிக்கிறார்.

banner

Related Stories

Related Stories