தமிழ்நாடு

இறுதிச் சடங்குகளைச் செய்த மகள்... 72 குண்டுகள் முழங்க நடிகர் விவேக்கின் உடல் தகனம்!

நடிகர் விவேக் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இறுதிச் சடங்குகளைச் செய்த மகள்... 72 குண்டுகள் முழங்க நடிகர் விவேக்கின் உடல் தகனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நடிகர் விவேக் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் காவல்துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. விவேக்கின் மகள் அஸ்வினி தந்தைக்கு இறுதிச் சடங்குகளைச் செய்தார்.

நகைச்சுவை நடிகரும், சமூகப் பற்றாளருமான விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் என பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் விவேக்கின் சமூக அக்கறை மற்றும் கலைச் சேவைக்காக அவரது உடலுக்கு காவல்துறை மரியாதை செய்யப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி, சற்றுமுன்பு மேட்டுக்குப்பம் மின் மயானத்தில் இறுதிச் சடங்கு நடத்தப்பட்டு, அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

விவேக்கின் உடல் விருகம்பாக்கம் வீட்டிலிருந்து வேனில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக மேட்டுக்குப்பம் மின் மயானம் நோக்கி சென்றது. இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

விவேக்கின் உடல் மயானத்துக்கு கொண்டு வரப்பட்டவுடன் இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு தலைமைக்காவலர், 3 பிகிலர், 12 பேராக இரண்டு வரிசையில் போலிஸார் நின்று துப்பாக்கிகள் வானை நோக்கி மூன்று முறை என 72 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன்பின்னர் மறைந்த விவேக்கின் குடும்பத்தினர் இறுதிச் சடங்குகளை செய்தனர். விவேக்கின் மகள் தேஜஸ்வினி அவரது உடலுக்கான இறுதிச் சடங்குகளை செய்தார், பின்னர் விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது.

banner

Related Stories

Related Stories