தமிழ்நாடு

சுடுகாடு அருகே மரத்தில் தூக்கிட்ட நிலையில் தொங்கிய மர்ம நபர்... தாம்பரம் அருகில் பரபரப்பு!

சுடுகாட்டில் உள்ள மரத்தில் அடையாளம் தெரியாத வடமாநிலைத்தை சேர்ந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுடுகாடு அருகே மரத்தில் தூக்கிட்ட நிலையில் தொங்கிய மர்ம நபர்... தாம்பரம் அருகில் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சென்னை தாம்பரம் அருகே சுடுகாட்டில் உள்ள மரத்தில் அடையாளம் தெரியாத வடமாநிலைத்தை சேர்ந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரத்தை அடுத்த நன்மங்கலம் வனத்துறைக்கு சொந்தமான சுடுகாட்டில் மர்மமான முறையில் மரத்தில் தூக்கிட்டு பிணமாக தொங்கிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. போலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தூக்கில் தொங்கியவர் அப்பகுதியில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கபட்டவர் எனத் தெரியவந்துள்ளது.

சென்னை தாம்பரம் அடுத்த நன்மங்கலம் வனத்துறைக்கு சொந்தமான சுடுகாட்டில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இன்று மதியம் சாய்ந்து கிடந்த மரத்தின் கிளையில் பிணமாக தூக்கில் தொங்கியதை கண்ட ரோந்துப் பணியில் இருந்த வனத்துறை காவலர்கள் சேலையூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் வனத்துறை காவலர்கள் உதவியுடன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் அவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு அப்பகுதியில் சுற்றித் திரிந்ததாகவும் கூறப்படுகிறது. மனநலம் பாதிக்கப்பட்டவர் வனப்பகுதியில் தூக்கிட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

banner

Related Stories

Related Stories