தமிழ்நாடு

ஒரே பதிவு எண்ணில் இரண்டு கார்கள்... கைவரிசை காட்டிய கும்பல் - அதிர்ந்துபோன போக்குவரத்து அதிகாரிகள்!

சிவகங்கையில் ஒரே வாகன பதிவு எண் கொண்ட 2 கார்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்தது அதிகாரிகள் மத்தியில் குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரே பதிவு எண்ணில் இரண்டு கார்கள்... கைவரிசை காட்டிய கும்பல் - அதிர்ந்துபோன போக்குவரத்து அதிகாரிகள்!
Kalaignar TV
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் தூத்துக்குடியைச் சேர்ந்த உமாபதி என்பவரின் இன்னோவா காரை வாங்கியுள்ளனர். பின்னர் காரின் உரிமையாளர் பெயரை மாற்றுவதற்காக முத்துக்குமார் சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

அப்போது காரின் ஆவணங்களைப் பரிசோதித்த அலுவலர்கள், இந்த கார் வேறு ஒருவர் பெயரில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வேறு ஒரு இன்னோவா கார் இதே பதிவு எண்ணோடு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்தது. இந்த இரண்டு கார்களிலும் ஒரே எண் இருப்பதைக் கண்ட அதிகாரிகளுக்குக் குழப்பமும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பின்னர், போக்குவரத்து அதிகாரிகள் இரண்டாவதாக வந்த காரின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் மதுரையைச் சேர்ந்த இடைத்தரகர் மூலம் தூத்துக்குடியில் இந்த காரை வாங்கியதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் இரண்டு இன்னோவா கார்களின் ஆவணங்களும் ஒரேமாதிரியாக இருந்துள்ளன. இதையடுத்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் போலி எண்களில் கார் விற்பனை செய்யும் கும்பல் குறித்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories