சினிமா

அண்ணாத்த’க்காக ஐதராபாத் பறந்த ரஜினி; ஜி.வி.பிரகாஷின் அடுத்தடுத்த படங்களின் பட்டியல் : சினி பைட்ஸ்

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள `வணக்கம்டா மாப்ள’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

அண்ணாத்த’க்காக ஐதராபாத் பறந்த ரஜினி; ஜி.வி.பிரகாஷின் அடுத்தடுத்த படங்களின் பட்டியல் : சினி பைட்ஸ்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ரஜினிகாந்த் - சிறுத்தை சிவா கூட்டணி இணைந்திருக்கும் படம் `அண்ணாத்த'. இது ரஜினிகாந்தின் 168வது படம். இதில் நயன்தாரா, பிரகாஷ் ராஜ், கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி எனப் பலரும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள், சென்ற ஆண்டு ஹைதராபாதில் துவங்கப்பட்டது. ஆனால், கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பிறகு மறுபடி படப்பிடிப்பு அனுமதி வந்து துவங்கிய போது, கொரோனா பாதிப்பு மற்றும் தேர்தல் நடக்க இருந்த பரபரப்பு போன்ற பல காரணங்களால் மீண்டும் நிறுத்தி வைக்கப்பட்டது.

இப்போது ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்புக்காக, நேற்று சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் ஹைதராபத்திற்கு கிளம்பினார். சில தினங்களுக்கு முன்பு விஜய் தனது 65வது படத்திற்காக ஜார்ஜியா கிளம்பியதும், கமல்ஹாசன் - லோகேஷ் கனகராஜ் பட வேலைகளும் துவங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

`அண்ணாத்த' படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ரூபன் படத்தொகுப்பு செய்கிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்தப் படத்தை தீபாவளி வெளியீடாக, நவம்பர் 4ம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

இசையமைப்பாளராக பல படங்களில் பணியாற்றிய ஜி.வி.பிரகாஷ் குமார், டார்லிங் படம் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்து ரிலீஸுக்கு ரெடியாக இருக்கிற படங்களில் எண்ணிக்கை அதிகம். அப்படி அவர் சமீபத்தில் இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கத் துவங்கினார். `வணக்கம்டா மாப்ள' என தலைப்பிடப்பட்ட அந்தப் படத்தில் அம்ரிதா ஐயர், டேனியல் அனி போப், ஆனந்த் ராஜ் எனப் பலரும் நடித்திருக்கிறார்கள்.

நேரடியாக டிவியில் ஒளிபரப்புவதற்காக என இதற்கு முன்பு, நாங்க ரொம்ப பிஸி, புலிக்குத்தி பாண்டி படம் எடுத்தது போன்று, இந்தப் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகியிருக்கிறது. விரைவில் இந்தப் படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் வெளியாகும்.

இந்தப் படம் போலவே, ஜிவி பிரகாஷ் நடித்து வெளியாகக் காத்திருக்கும் படங்களின் பட்டியல் தனியாக இருக்கிறது. ரவியரசு இயக்கத்தில் ஐங்கரன்', எழில் இயக்கத்தில் `ஆயிரம் ஜென்மங்கள்', வசந்தபாலன் இயக்கத்தில் `ஜெயில்', சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் `அடங்காதே', வெங்கட் இயக்கத்தில் 4ஜி', ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் `காதலைத் தேடி நித்யாந்தா', சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் `பேச்சுலர்' ஆகிய படங்கள் தயாராக இருக்கிறது. இது தவிர `காதலிக்க யாருமில்லை' போன்ற படங்களில் நடித்து வருகிறார். ஹாலிவுடில் அறிமுகமாகியிருக்கும் `ட்ராப் சிட்டி' படமும் தயாராகிக் கொண்டிருக்கிறது.

banner

Related Stories

Related Stories