தமிழ்நாடு

காதலனின் தந்தையை குத்திக் கொலை செய்த பெண்ணின் உறவினர்கள்... சேலம் அருகே பயங்கரம்!

சேலம் அருகே காதல் தகராறில், காதலனின் தந்தை குத்தி கொலை செய்யப்பட்ட சம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலனின் தந்தையை குத்திக் கொலை செய்த பெண்ணின் உறவினர்கள்... சேலம் அருகே பயங்கரம்!
Kalaignar TV
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சேலம் மாவட்டம், செங்கான்வளவு பகுதியைச் சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளியான தங்கவேலுவுக்கு சின்னம்மாள் என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இரண்டாவது மகனான பிரகாஷ், அதே ஊரைச் சேர்ந்த சந்தியா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இதையடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து, தங்களது வீடுகளில் தெரிவித்துள்ளனர். இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதுபற்றி அறிந்த சந்தியாவின் உறவினர்கள் தங்கவேலு வீட்டிற்குச் சென்று தகராறு செய்துள்ளனர். இதனால் இரு வீட்டாருக்கும் இடையே கடும் சண்டை ஏற்பட்டுள்ளது. இப்போது திடீரென சந்தியாவின் உறவினர்கள் தங்கவேலுவை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இதில் தங்கவேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார், தங்கவேலுவின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து தங்கவேலுவை கத்தியால் குத்தியவரை போலிஸார் தேடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories