தமிழ்நாடு

தமிழக தேர்தல் விறுவிறு: ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்; முன்னிலையில் விருதுநகர் - மதியம் 1 மணி நிலவரம்!

தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி அதிகபட்சமாக விருதுநகர் மாவட்டத்தில் 41.08 % வாக்குகள் பதிவாகியுள்ளது.

தமிழக தேர்தல் விறுவிறு: ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்; முன்னிலையில் விருதுநகர் - மதியம் 1 மணி நிலவரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளா ஆகிய மூன்று மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியிலிருந்து தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் உள்ள 88,937 வாக்குப்பதிவு மையங்களில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார். மனைவி துர்கா ஸ்டாலின், மற்றும் தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வரிசையில் நின்று வாக்களித்தனர்.

தமிழக தேர்தல் விறுவிறு: ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்; முன்னிலையில் விருதுநகர் - மதியம் 1 மணி நிலவரம்!

இதேபோல் தமிழகம் முழுவதும் தி.மு.க தலைவர்கள் வாக்களித்து வருகின்றனர். இதையடுத்து தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 1 மணிவரை எத்தனை சதவீத வாக்குகள் பதிவாகியது என்பது பற்றி செய்தியாளர் சந்திப்பில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இதில், தமிழகம் முழுவதும் 1 மணி நிலவரப்படி 39.61 % வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக விருதுநகரில் தொகுதியில் 41.8% வாக்குகளும், குறைந்தபட்சமாக நெல்லையில் 32.3 % வாக்குகளும் பதிவாகியுள்ளது. அதேபோல் சென்னையில் 37.19% வாக்குகள் பதிவாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories