தமிழ்நாடு

“ADMK - BJPயின் பணபலத்தை முறியடித்து தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றி பெறும்” : கே.பாலகிருஷ்ணன் உறுதி!

அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க கூட்டணியின் பணபலத்தை முறியடித்து தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

“ADMK - BJPயின் பணபலத்தை முறியடித்து தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றி பெறும்” : கே.பாலகிருஷ்ணன் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் துவங்கி விருவிருப்பாக நடைபெற்றது வருகிறது. காலையிலிருந்தே அரசியல் கட்சித் தலைவர்களும், மக்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.காலை 9 மணி நேர நிலவரப்படி 13.80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வாக்களித்தார். பின்னர் செய்திளார்கள் சந்திப்பில், “மக்கள் எழுச்சியோடு வாக்களித்து வருகின்றனர். இதனை பார்க்கும்போது நிச்சயம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி. தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெறும். மக்களின் இந்த எழுச்சியைத் தாங்க முடியாத அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணியினர் சரளமாக பணப்பட்டுவாடா செய்துள்ளனர். அந்த பணபலத்தை முறியடித்து தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவுக்குப் பின் முடிவுகளை அறிய ஒருமாதம் காத்திருக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது. இறுதிக் கட்டமாக நடத்தியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. ஒரு மாத காலம் இந்த வாக்குப் பெட்டிகளைப் பாதுகாப்பது என்பது அதில் என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. வரும் தேர்தல்களிலாவது இந்த நிலை மாற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories