தமிழ்நாடு

“மோடியின் முகமூடியை கழட்டினால் இந்தியும் சமஸ்கிருதமும் தெரியும்” : கி.வீரமணி குற்றச்சாட்டு!

தமிழுக்காக வெறும் 22 கோடியும் சமஸ்கிருதத்திற்கு 635 கோடியும் பிரதமர் ஒதுக்கியுள்ளதாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.

“மோடியின் முகமூடியை கழட்டினால் இந்தியும் சமஸ்கிருதமும் தெரியும்” : கி.வீரமணி குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

திராவிடர் கழகத்தின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் சுதேசி மில் அருகே நடைபெற்றது. இதில் காங்கிரஸ் - தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "புதுச்சேரியில் ஜனநாயக படுகொலை செய்து ஆட்சியை பாரதிய ஜனதா கட்சி கலைத்தது. இதற்காக சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டியும் விலைக்கு வாங்கியும் ஆட்சியைக் கவிழ்த்தது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “நான்தான் முதலமைச்சர் வேட்பாளர் என இங்கு சிலர் கூறி வருகிறார்கள். ஆனால்,யாரும் முதலமைச்சராக முடியாது. பா.ஜ.க வேறு திட்டத்தை வைத்திருக்கிறது. தமிழ் மொழி குறித்து மோடி பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் இதுவரை தமிழுக்காக 22 கோடி மட்டுமே ஒதுக்கி உள்ளார்.

ஆனால், சமஸ்கிருதத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 635 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார். மோடியின் வித்தை இதில் தெரியும். அவர் போட்டிருப்பது முகமூடி. அதை கழட்டினால் இந்தியும் சமஸ்கிருதமும் தெரியும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories