தமிழ்நாடு

‘ஒரு இடத்திலும் இல்லை.. முட்டைதான் நமக்கு’ : விகடன் கருத்துக்கணிப்பால் நொந்துபோன பா.ஜ.க தலைவர்கள்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 163 தொகுதிகளில் வெற்றி பெற்று தி.மு.க கூட்டணி ஆட்சி பிடிக்கும் என ஜூனியர் விகடன் கருத்துக் கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஒரு இடத்திலும் இல்லை.. முட்டைதான் நமக்கு’ : விகடன் கருத்துக்கணிப்பால் நொந்துபோன பா.ஜ.க தலைவர்கள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் நெருங்கிவிட்டதால் பிரதான கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க கூட்டணிகள் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒருபுறம் கட்சிகள் தீவிரமாகப் பரப்புரையில் ஈடுபட்டு வரும் அதேவேலையில், அடுத்த முதல்வர் யார்? அடுத்து ஆட்சி கட்டிலில் அமரப்போவது யார் என்பது குறித்தான தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகளும் மறுபுறம் வெளியாகி வருகிறது.

இந்த கருத்து கணிப்பு முடிவுகள் எல்லாம் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிதான் ஆட்சியை அமைக்கப்போகிறது என கூறிவருகின்றன. டைம்ஸ் நவ் சி வோட்டர் , ABP- சி வோட்டர் மற்றும் நக்கீரன் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்கள் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளும் தி.மு.க கூட்டணிதான் ஆட்சியைப் பிடிக்கும் என தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் 234 தொகுதிகளிலும் கருத்துக்கணிப்புகளை நடத்தி அதன் முடிவுகளை ஜூனியர் விகடன் வெளியிட்டுள்ளது. இதில், தி.மு.க கூட்டணி 163 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று ஜூனியர் விகடன் கணித்துள்ளது.

‘ஒரு இடத்திலும் இல்லை.. முட்டைதான் நமக்கு’ : விகடன் கருத்துக்கணிப்பால் நொந்துபோன பா.ஜ.க தலைவர்கள்

அதேபோல், அ.தி.மு.க 48 இடம் கிடைக்கும் என்றும், அ.தி.மு.க கூட்டணியில் 20 தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என ஜூனியர் விகடன் கருத்து கணிப்பு முடிவில் தெரிவித்துள்ளது.

ஜூனியர் விகடன் நடத்திய கருத்துக் கணிப்பில் மூன்று முக்கிய கேள்விகள் மக்களிடம் கேட்கப்பட்டுள்ளது. அதில் எதிர்கால தமிழக அரசியலில் யார் முக்கியமான தலைவராக இருப்பார் என்ற கேள்விக்கு, 43,12 % பேர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தான் எதிர்கால அரசியலில் முக்கிய தலைவராக இருப்பார் என தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமிக்கு 29.20% பேர் தெரிவித்துள்ளனர்.

அடுத்து, தமிழகத்தின் அடுத்த முதல்வராக, யார் வர வேண்டுமென விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு 45.9 % பேர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினையும், 30.11 % பேர் எடப்பாடி பழனிசாமியையும் தெரிவித்துள்ளனர்.

‘ஒரு இடத்திலும் இல்லை.. முட்டைதான் நமக்கு’ : விகடன் கருத்துக்கணிப்பால் நொந்துபோன பா.ஜ.க தலைவர்கள்

மேலும் தமிழகத்தின் ஆட்சி மாற்றம் தேவையா என்ற கேள்விக்கு 70.89 % பேர் ஆம் என தெரிவித்துள்ளதாக ஜூனியர் விகடன் நடத்திய கருத்துக் கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாண்டுகால அ.தி.மு.க ஆட்சி மீது மக்களிடையே வெகுவான அதிருப்தி நிலவுவதாலும், கட்சியையும் ஆட்சியையும் பா.ஜ.கவிடம் அடகு வைத்துச் செயல்படுவதாலும் அ.தி.மு.க படுதோல்வியடைந்து, தி.மு.க 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளை வெல்லும் என அரசியல் நோக்கர்கள் நம்பிக்கை தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories