தமிழ்நாடு

“காயங்களுடன் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த காதல் ஜோடி” : கொலையா அல்லது தற்கொலையா என போலிஸார் விசாரணை !

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக போலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

“காயங்களுடன் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த காதல் ஜோடி” : கொலையா அல்லது தற்கொலையா என போலிஸார் விசாரணை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த எனறயானூர் கிராமத்தை சேர்ந்த மகாதேவன் மகன் ராமஜெயம் என்கின்ற அருணாச்சலம், இவர் மயிலம் அருகே உள்ள தழுதாளி அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்துவிட்டு தற்போது வீட்டில் இருந்து வருகிறார்.

அதே பகுதியை சேர்ந்த பாவாடைராயன் மகள் அபிநயா, இவர் கொந்தமூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் அண்ணன் தங்கை உறவு என்பதால் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து இருவரும் தலைமறைவாகினர். இதுகுறித்து பெற்றோர் கிளியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் திண்டிவனம் அடுத்த கருணாவூர் வயல்வெளி பகுதியிலுள்ள புளியமரத்தில் துப்பட்டாவில் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

“காயங்களுடன் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த காதல் ஜோடி” : கொலையா அல்லது தற்கொலையா என போலிஸார் விசாரணை !

நேற்று மாலை அப்பகுதிக்கு வயல்வெளிக்கு சென்ற பொதுமக்கள் புளியமரத்தில் இருவர் தூக்கில் இறந்த நிலையில் தொங்கியதை கண்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற திண்டிவனம், கிளியனூர் மயிலம் போலிஸார் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்தவர்களின் உடலில் ரத்த காயங்கள் இருப்பதால் உறவினர்கள் யாரேனும் கொலை செய்து இருக்கலாம் என தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக திண்டிவனம் போலிஸார் வழக்கு பதிவு செய்து கொலையா அல்லது தற்கொலையா என விசாரணை செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories