தமிழ்நாடு

தபால் ஓட்டு போடும் ஊழியர்களுக்கு பேலட் பேப்பர் தராமல் இழுத்தடிப்பு : தோல்வி பயத்தில் அ.தி.மு.க அரசு சதி!

தபால் ஓட்டு போடும் அரசு ஊழியர்களுக்கு முறையான பேலட் பேப்பர் தராமல் இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தபால் ஓட்டு போடும் ஊழியர்களுக்கு பேலட் பேப்பர்  தராமல் இழுத்தடிப்பு : தோல்வி பயத்தில் அ.தி.மு.க அரசு சதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகம் முழுவதும் முழுவதிலும் நேற்று ஆசிரியருக்கான தபால் ஓட்டு பதிவு நடைபெற்றது. இதனை தொடர்ந்து தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்கு சீட்டினை ஒளித்து வைத்தும் தபால் வாக்கு உரையில் பேலட் பேப்பர் இல்லாமல் இருந்து உள்ளது.

இதனை அதிகாரிகளிடம் கேட்டதற்கு சரியான பதில் தரவில்லை. இதானல் காலை 10 மணிக்கு நடைபெற இருந்த வாக்கு பதிவு மதியம் 3 மணிக்கு துவங்கி உள்ளது. இதனால் 30 சதவீதம் வாக்குகள் மட்டும் பதிவாகி உள்ளது.

இதனை அறிந்த தி.மு.க வேட்பாளர் தங்க தமிழ்ச் செல்வன் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம், நீங்கள் அரசுக்கு சாதகமாக செயல்படுகிறேர்கள் என கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தி.மு.கவினர் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர் பின்னர் மறுவாக்கு பதிவு செய்ய கோரி மதுரை - தேனி சாலை மறியல் செய்தனர். பின் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க படும் என கூறி மறியலை கலைத்தனர்.

இது பற்றி கூறிய, தி.மு.க வேட்பாளரும் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச் செல்வன், “வாக்கு அளிக்க வந்த ஆசிரியர்களுக்கு முறை பேலட் பேப்பர் வழங்காததால் 30 சதவீதம் வாக்குகள் மட்டும் பதிவாகி உள்ளது. எனவே மறுவாக்கு பதியவேண்டும். இங்கு உள்ள அரசு அதிகாரிகளை மாற்ற வேண்டும். இல்லை என்றால் 4 தி.மு.க வேட்பாளர்களுடன் பெரும் போராட்டம் நடத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories