தமிழ்நாடு

2017ல் அறிவிக்கப்பட்ட குஜராத்தில் எய்ம்ஸ் பணிகள் ஜரூர்; இங்கு ஒரு செங்கல்கூட எடுத்து வைக்க வக்கற்ற அதிமுக

2 ஆண்டுகளுக்கு பிறகு அறிவிக்கப்பட்ட குஜராத் எய்ம்ஸ் பணிகள் விரைவாக நடைபெற்று வரும் வேளையில் முன்பே அடிக்கல்நாட்டப்பட்ட மதுரையில் இன்னும் ஒரு செங்கலை கூட எடுத்து வைக்காத நிலையே உள்ளது.

2017ல் அறிவிக்கப்பட்ட குஜராத்தில் எய்ம்ஸ் பணிகள் ஜரூர்; இங்கு ஒரு செங்கல்கூட எடுத்து வைக்க வக்கற்ற அதிமுக
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2015ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி மத்திய பட்ஜெட்டில் பலத்த மேஜை தட்டல்களுடன் அறிவிக்கப்பட்டது தமிழகத்திற்கான எம்ய்ஸ் திட்டம். தரம் வாய்ந்த மருத்துவமனை தமிழகத்திற்குக் கிடைத்துவிட்டதாக இன்று வரை பா.ஜ. மட்டுமல்ல, ஆளும் அ.தி.மு.க. கூட கொண்டாடி வருகிறது. ஆனால் அறிவித்து 6 ஆண்டுகள் கடந்தும் ஒரு செங்கல் கூட எடுத்து வைக்கப்படவில்லை என்பது எத்தனை பேருக்கு தெரியும்.?

மத்திய அரசால் தமிழகம் வஞ்சிக்கப்படுவதற்கு மிகச்சிறந்த உதாரணம் மதுரை எய்ம்ஸ். ஆம் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை மாவட்டம், தோப்பூரில் சுமார் 224.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக 2018 ம் ஆண்டு ஜூன் மாதம் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தோப்பூரில் இருந்து மண் மாதிரிகள் நாக்பூருக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. முடிவில் இந்த இடம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டிடம் கட்ட ஏற்றது என தெரியவந்தது. மத்திய அரசின் மருத்துவ கட்டுமானப் பணிகள் நிறுவன அதிகாரிகள் இடத்தை பார்வையிட்டனர்.

பிரதமர் அடிக்கல்

கட்டுமான பணிகளுக்கான அனுமதி கடந்த 2018ம் ஆண்டு டிசம்பரில் வழங்கப்பட்டது. இதையடுத்து 2019, ஜன. 27ம்தேதி மதுரையில் பிரதமர் மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டினார். பின்னர் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள், மத்தியக் குழு மற்றும் ஜப்பானிய நிதிக்குழுவினர் இடத்தை ஆய்வு செய்தனர். பின்னர், மருத்துவமனைக்கான இடத்தை மத்திய சுகாதாரத் துறையினரிடம் ஒப்படைத்துவிட்டதாகவும், பணிகள் விரைவில் துவங்கும் எனவும், தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், இடம் ஒப்படைக்கப்படவே இல்லை என்கிற சர்ச்சை பிறகு பூதாகரமாக வெடித்தது. தோப்பூரில் எய்ம்ஸ் அமைய உள்ள 250 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் 224.24 ஏக்கரில் மருத்துவமனை அமைப்பதற்கும், 20 ஏக்கர் நிலம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன குழாய் வழித்தடத்திற்கும், 5 ஏக்கர் நிலம் சாலைப் பணிகளுக்கும் என வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு தமிழக வருவாய்த் துறை மத்திய சுகாதாரத் துறையிடம் ஒப்படைத்ததாக கூறப்பட்டது.

2017ல் அறிவிக்கப்பட்ட குஜராத்தில் எய்ம்ஸ் பணிகள் ஜரூர்; இங்கு ஒரு செங்கல்கூட எடுத்து வைக்க வக்கற்ற அதிமுக

சாலைப்பணிகள் நிறைவு...

எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்திற்கு செல்வதற்கான சாலை பணிகள் தோப்பூர் அருகேயுள்ள கூத்தியார் குண்டு விலக்கிலிருந்து கரடிக்கல் வரை மத்திய சாலை நிதி திட்டத்திலிருந்து ரூ.21 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் 6.4 கி.மீ. நீளத்திற்கு சாலைகள் அமைக்கும் பணி தொடங்கி நிறைவு பெற்றுவிட்டது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் 5.50 கி.மீ. சுற்றளவிற்கு சுற்றுச்சுவர் கட்டும் பணி 2 ஆண்டுகளாகியும் முழுமையாக நிறைவடையவில்லை. மேலும், மத்திய அரசின் நிதி ஒதுக்கீடின்றி, ஜப்பானை சேர்ந்த ஜிகா நிறுவனத்தின் நிதியுதவியுடன் கட்டுமானப் பணிகள் துவங்கும் என பேரிடியை இறக்கியது மத்திய அரசு.

45 மாதங்களில்

மதுரை எய்ம்ஸ் பணிகள் துவங்கப்பட்டால் 45 மாதங்களில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி இரண்டு வருடங்கள் முழுமையாக நிறைவடைந்துவிட்டன. ஆனால் நாட்டிய செங்கல் அப்படியே இருக்கிறதே தவிர கட்டுமானப்பணிகள் இன்னும் தொடங்கிய பாடில்லை. 45 மாதங்கள் இலக்கு. அதாவது2023ம் ஆண்டு செப்டம்பர்மாதம் பயன்பாட்டிற்கு வர வேண்டும். ஆனால் இப்போதே 25 மாதங்கள் முடிவடைந்து விட்டன. இன்னும் பணிகள் தொடங்கக் கூடிய அறிகுறிகளைக் கூட காணோம். குஜராத்தில் 2017-18 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, ராஜ்கோட்டில் உள்ள தற்காலிக கட்டிடத்தில் 2020ம் ஆண்டு மாணவர் சேர்க்கை துவங்கியது. நிரந்தர கட்டிடப் பணிகள் கடந்த டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டுமானப் பணிகள் படுவேகமாக நடந்து வருகிறது. ஆனால் மதுரையில் ஒரு சிறு பணியும் துவங்கவில்லை.

ஒப்பந்தம் இழுத்தடிப்பு?

இந்தியாவில் பிற இடங்களில் எல்லாம் அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், ஜப்பானை சேர்ந்த ஜிகா நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு, அதில் கிடைக்கும் கடன் தொகையைக் கொண்டே எய்ம்ஸ் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. இந்த ஜிகா நிறுவன ஒப்பந்தம் தொடர்பாக, ஒவ்வொரு முறை கேள்வி எழும் போதும், இன்னும் மூன்று மாதங்களுக்குள் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று சொல்லிக்கொண்டே இருக்கின்றனர். ஆனாலும் ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகாமல் தடிப்பு நடந்து கொண்டே போகிறது.

எய்ம்ஸ் மருத்துவமனைக்கான ஜிகா நிறுவனத்துடன்கடன் ஒப்பந்தம் இதுவரை கையெழுத்தாகவில்லை. 2019, ஜூன் மாதம் பிரதமரின் ஆரோக்கிய பாதுகாப்புத் திட்டத்தின் (பி.எம்.எஸ்.எஸ்.ஒய்.) இயக்குநர் கூறுகையில், ‘‘மாநிலஅரசிடம் நிலம் பெறுவது ஒரு பிரச்சினையே அல்ல.

2017ல் அறிவிக்கப்பட்ட குஜராத்தில் எய்ம்ஸ் பணிகள் ஜரூர்; இங்கு ஒரு செங்கல்கூட எடுத்து வைக்க வக்கற்ற அதிமுக

மாநில அரசிடம் நிலம் இருக்கிறது. நான் அங்கு சென்று கையெழுத்திட வேண்டும். அவ்வளவு தான்’’ என்று பேட்டியளித்து செய்தியாக வெளி வந்தது. ஆனால், இந்தக் கையெழுத்துப் போடுவதற்கு 18 மாதங்கள் ஆகியது. இப்படி மதுரை எய்ம்ஸ் திட்டத்திற்கான அத்தனை பணிகளிலும் மந்த நிலையாக செயல்பட்டு, இத்திட்டத்தையே இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கைகளே கடந்த சில ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

அதிகாரி நியமனமில்லை

இந்தியாவில் புதிதாக தொடங்க உள்ள மற்ற அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைகளிலும் ஏற்கனவே உள்ள பழைய கட்டிடங்கள் கண்டறியப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஆனால் மதுரை எய்ம்ஸ்க்கு மட்டும் இன்னும் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடங்கியபாடில்லை. மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை ஒருங்கிணைக்க தனி அதிகாரி நியமனமும் இதுவரை இல்லை. மத்திய பா.ஜ.க. அரசு மற்றும் அ.தி.மு.க. அரசு ஆகியவற்றின் அலட்சியத்தால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் திட்டம் ஆழ்ந்த உறக்கத்திற்கு போயிருக்கிறது.

நன்றி - தினகரன் நாளேடு

banner

Related Stories

Related Stories