தமிழ்நாடு

“சமரசமற்ற படைப்பாளி SP.ஜனநாதன் மறைவு கலையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு”: மு.க.ஸ்டாலின் இரங்கல் !

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“சமரசமற்ற படைப்பாளி SP.ஜனநாதன் மறைவு கலையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு”:  மு.க.ஸ்டாலின் இரங்கல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தனது திரைமொழியின் வழியாக பொதுவுடைமை கருத்துகளைப் பேசிய, திராவிட - இடதுசாரி சிந்தனையாளர், சமரசமற்ற படைப்பாளி எஸ்.பி.ஜனநாதன் மறைவு கலையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், “பொதுவுடைமைக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்ட சமூக அக்கறை மிகுந்த திரைப்படங்களை இயக்கி, தமிழ்த் திரையுலகின் தன்னிகரற்ற படைப்பாளியாய் விளங்கிய இயக்குநர் ஜனநாதனின் மறைவு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

‘இயற்கை’ திரைப்படத்தில் காதலுடன், பகுத்தறிவைக் கலந்து பேசிய இயக்குநர் ஜனநாதன், ஈ, பேராண்மை போன்ற படங்களில் எளிய மக்கள் மீதான அதிகார வர்க்கத்தின் சுரண்டலுக்கு எதிராகவும், சமூகநீதிக்கு ஆதரவாகவும் அழுத்தமான கருத்துகளைப் பதிவு செய்த அசாத்தியமான படைப்பாளி.

“சமரசமற்ற படைப்பாளி SP.ஜனநாதன் மறைவு கலையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு”:  மு.க.ஸ்டாலின் இரங்கல் !

தற்போது விவசாயிகள் பிரச்சினையை மையமாகக் கொண்டு அவர் இயக்கிய ‘லாபம்’ திரைப்படத்தின் வேலைகள் நிறைவு பெறும் தருவாயில் இருக்கும் போது, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, எதிர்பாராத வகையில் மரணமடைந்திருப்பது வேதனையைத் தருகிறது.

அவரது மறைவு திரையுலகினருக்கு மட்டுமின்றி, முற்போக்குச் சிந்தனை கொண்ட அத்தனை அரசியல், சமூக இயக்கங்களுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் உறவினர்கள், நண்பர்கள், திரையுலகினர் மற்றும் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

banner

Related Stories

Related Stories