தமிழ்நாடு

"பா.ஜ.க-வை வெளியேற்றாவிட்டால் தமிழகம் உத்தர பிரதேசமாகிவிடும்" - இயக்குநர் கரு.பழனியப்பன் எச்சரிக்கை!

தமிழகத்தில் எப்படியாவது இந்தியைத் திணித்துவிட வேண்டும் என்ற பா.ஜ.க-வின் எண்ணத்தை நாம் ஓங்கி எதிர்க்கவேண்டும் என இயக்குநர் கரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

"பா.ஜ.க-வை வெளியேற்றாவிட்டால் தமிழகம் உத்தர பிரதேசமாகிவிடும்" -  இயக்குநர் கரு.பழனியப்பன் எச்சரிக்கை!
Kalaignar TV
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் அடுத்த மாதம் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலும் சேர்ந்தே நடைபெறுகிறது.

இந்நிலையில், கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார் என பா.ஜ.க தலைமை அறிக்கை ஒன்று வெளியிட்டது. இந்த அறிக்கை முழுக்க முழுக்க இந்தி மொழியில் எழுதப்பட்டிருந்தது. இவர்களின் இந்த நடைமுறை தமிழகத்தில் எப்படியாவது இந்தியைத் திணித்து விடவேண்டும் என்பதையே காட்டுகிறது. பா.ஜ.கவின் இந்த இந்தி திணிப்பு முறையைத் தமிழகம் எப்போதும் எதிர்த்தும், கண்டித்தும் வருகிறது.

இந்நிலையில், "பா.ஜ.கவின் இந்தி திணிப்பு முயற்சியை நாம் தொடர்ச்சியாக எதிர்க்க வேண்டும், இல்லையென்றால் தமிழகம் உத்தர பிரதேசமாக மாறிவிடும்" என இயக்குநர் கரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கரு.பழனியப்பன் கூறுகையில், "தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி நடைபெறும் இடைத்தேர்தலுக்கு, இந்தியில் ஏன் வேட்பாளர் அறிவிப்பை வெளியிட வேண்டும்? இங்கு இருக்கும் மக்கள் தமிழர்கள் தானே? எனில் இந்த அறிவிப்பு யாருக்கு? நீங்கள் அறிவித்திருக்கும் வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனால் இந்த கடிதத்தை முழுமையாகப் படித்து விடமுடியுமா? இப்படி பா.ஜ.க எப்படியாவது தமிழகத்தில் இந்தியைத் திணித்து விட வேண்டும் என்று தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது.

பா.ஜ.கவின் இந்த முயற்களை தொடர்ந்து நாம் ஓங்கி எதிர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் இவர்கள் தமிழகத்தை அடுத்த உத்தர பிரதேசமாக மாற்றிவிடுவார்கள். இவர்களை இந்த சட்டமன்றத் தேர்தலில் வெளியேற்றவில்லை என்றால், ஒட்டுமொத்த தமிழகத்தையே சிதைத்து விடுவார்கள்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories