தமிழ்நாடு

“2 பெண்களை மணந்து, 10ஆம் வகுப்பு சிறுமியையும் ஏமாற்றி சிதைத்த இளைஞன்” - நெல்லை அருகே அதிர்ச்சி சம்பவம்!

25 வயது இளைஞன் இரண்டு பெண்களை திருமணம் செய்துகொண்டு, சிறுமிகளை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“2 பெண்களை மணந்து, 10ஆம் வகுப்பு சிறுமியையும் ஏமாற்றி சிதைத்த இளைஞன்” - நெல்லை அருகே அதிர்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

25 வயது இளைஞன் இரண்டு பெண்களை திருமணம் செய்துகொண்டு, அவர்களுக்குத் தெரியாமல் சிறுமிகளை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே ஸ்டீபன் என்பவர் இரண்டு பெண்களை திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். மேலும், தனது இரு மனைவிகளுக்கும் தெரியாமல் அதே பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியிடமும் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி ஏமாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், பள்ளிக்குச் சென்ற அந்த மாணவி மாலையில் வீடு திரும்பவில்லை. பள்ளிக்குச் சென்ற மகளைக் காணவில்லை என்று அந்த மாணவியின் பெற்றோர் ஊர் முழுவதும் தேடியுள்ளனர். வெகுநேரம் ஆகியும் கிடைக்காததால் அருகில் உள்ள பணகுடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் சிறுமியின் பெற்றோர் இல்லாத சமயத்தில் ஸ்டீபன் அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றதை அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் பார்த்துள்ளனர். அவர்கள் சிறுமியின் பெற்றோரிடம் தெரிவிக்கவே அவர்கள் தங்களது மகளைக் கண்டித்துள்ளனர்.

அடுத்தநாளே மாணவி மாயமானதால் ஸ்டீபன் மீது சந்தேகமடைந்து, அதுகுறித்தும் போலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். ஸ்டீபனை போலிஸார் தேடிவந்த நிலையில் நாகர்கோவில் மலைப்பகுதியில் இருப்பது தெரியவந்துள்ளது.

அங்கு மாட்டுப்பண்ணையில் வேலை பார்த்துக்கொண்டு, 10ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளான். இதையடுத்து ஸ்டீபனை கைது செய்த போலிஸார் மேற்கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், இரண்டு மனைவிகளுடன் குடும்பம் நடத்தி வந்த ஸ்டீபன், அவர்களுக்கு தெரியாமல் 10ம் வகுப்பு மாணவி மற்றும் இன்னொரு பெண்ணுடனும் பழகி, ஷிப்ட் முறையில் குடும்பம் நடத்தி வருவதாகவும் கூறியிருக்கிறான்.

இதனையடுத்து சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த ஸ்டீபனை பணகுடி போலிஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

- நிதர்சன் உதயா

banner

Related Stories

Related Stories