இந்தியா

"எங்கே போனது பா.ஜ.க-வின் பசு பாசம்..?" - பிளாஸ்டிக் கழிவுகளைத் தின்று உயிரிழக்கும் மாடுகள்!

பா.ஜ.க ஆளும் மாநிலத்தில் கர்ப்பிணி பசுவின் வயிற்றில் இருந்த 71 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்ட நிலையில், அப்பசு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

"எங்கே போனது பா.ஜ.க-வின் பசு பாசம்..?" - பிளாஸ்டிக் கழிவுகளைத் தின்று உயிரிழக்கும் மாடுகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க ஆளும் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் கர்ப்பிணி பசுவின் வயிற்றில் இருந்த 71 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்ட நிலையில், அப்பசு பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

கடந்த மாதம் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் சாலை விபத்தில் சிக்கிய பசு ஒன்று நடக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தது. இதைக்கண்ட அவ்வழியே சென்ற ஒருவர் விலங்குகள் நல அமைப்பான Pepole for animals trust-ற்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த அமைப்பினர் பசுவை மீட்டு கால்நடை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

மருத்துவர்கள் பரிசோதித்தபோது பசுவின் வயிற்றில் 71 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக், இரும்பு பொருட்கள் இருப்பது தெரியவந்தது. மேற்கொண்டு தீவிர சிகிச்சையில் ஈடுபட்ட மருத்துவர்கள் 4 மணி போரட்டத்திற்கு பிறகு கழிவுகளை அகற்றியுள்ளனர். பசுவின் வயிற்றில் பிளாஸ்டிக், இரும்பு ஆணிகள், கோலி குண்டுகள் உள்ளிட்ட குப்பைகள் அகற்றப்பட்டன.

இருப்பினும் பிளாஸ்டிக் மற்றும் இரும்பு கழிவுகளை அகற்றும்போது, அதன் வயிற்றில் இருந்த கன்று உயிரிழந்தது. மூன்றே நாட்களில் பசுவும் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

"எங்கே போனது பா.ஜ.க-வின் பசு பாசம்..?" - பிளாஸ்டிக் கழிவுகளைத் தின்று உயிரிழக்கும் மாடுகள்!

ஹரியானாவில் சில நாட்களுக்கு முன்புதான் ஒரு பசுவின் வயிற்றிருந்து 50 கிலோ குப்பைகளை விலங்கு நல மருத்துவர்கள்அகற்றியுள்ளனர். இதேபோன்று கடந்த ஆண்டு சென்னையில் குப்பைகளை தின்று வளர்ந்த மாட்டின் வயிற்றிலிருந்து 52 கிலோ அளவிலான கழிவு அகற்றப்பட்டது.

இதுபோன்ற சம்பவங்கள் பா.ஜ.க அரசு கால்நடை பராமரிப்பு திட்டங்களில் தோல்வியடைந்திருப்பதையே காட்டுகிறது. பசு பாதுகாப்பு என்ற பெயரில் அப்பாவி மக்களின் மீது வன்முறை பிரயோகிக்கப்படுவதை ஊக்குவிக்கும் பா.ஜ.க அரசு, பசுக்கள் இவ்வாறு உயிரிழப்பதைக் கண்டுகொள்வதில்லை.

இந்தியாவில் பராமரிப்பின்றி சாலையோரம் நடமாடும் 5 மில்லியன் மாடுகள் வீதிகளில் கிடக்கும் குப்பைகளை உட்கொள்கின்றன எனும் திடுக்கிடும் தகவலும் கிடைத்துள்ளது.

பசுவின் சாணம், கோமியம் ஆகியவற்றை சர்வரோக நிவராணி எனச் சொல்லிக்கொண்டு ‘பசு அறிவியல்’ என்ற பெயரில் தேர்வு நடத்திய மோடி அரசு, பசுக்கள் கழிவுகளைத் தின்று உயிரிழப்பதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது?

- நிதர்சன் உதயா

banner

Related Stories

Related Stories