தமிழ்நாடு

மூச்சு விடாமல் தண்டால் எடுத்து எடுத்து அசத்திய ராகுல் காந்தி - கன்னியாகுமரியில் மாணவர்களிடையே நெகிழ்ச்சி!

ஆசிரியர்கள் இல்லாமல் படிக்க முடியாது, மாணவர்களும் ஆசிரியர்களும் மிகவும் முக்கியமானவர்கள் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும் என மாணவர்கள் மத்தியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசியுள்ளார்.

மூச்சு விடாமல் தண்டால் எடுத்து எடுத்து அசத்திய ராகுல் காந்தி - கன்னியாகுமரியில் மாணவர்களிடையே நெகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தென் மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி மூன்றாவது நாள் தேர்தல் பரப்புரையாக கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதிக்கு வந்த அவர் அங்குள்ள தேவாலயத்தில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அங்குள்ள புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளிக்குச் சென்ற ராகுல் காந்திக்கு மலர் தட்டு ஏந்தி ஆசிரியர் பயிற்சி மாணவிகளால் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து கூட்ட அரங்கில் பேண்ட் வாத்தியம் முழங்க வரவேற்று அழைத்து சென்றனர்.

மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்பு செயல்விளக்கம் காண்பித்தல் நடந்தது. அங்கு வரவேற்பு பாடல் குழுவினர் பாடல் பாடி வரவேற்றனர். தொடர்ந்து வரவேற்பு பாடலுக்கு மாணவிகள் பரதநாட்டியமும் ஆடினர். அதனை மேடையில் இருந்தவாறு ராகுல்காந்தி கை தட்டி ரசித்தார். கரகாட்டம் உட்பட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளைப் பார்வையிட்டார்.

பின்னர் மாணவர்கள் மத்தியில் ராகுல்காந்தி பேசுகையில், “ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கனவு உள்ளது. நீங்கள் டாக்டர் ஆக வேண்டும் என்று விரும்புகிறீர்கள், வங்கியில் வேலை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள். ஒவ்வொருவரும் என்ன விரும்புகிறார்கள் என்பதை அறியத்தான் இதுபோன்ற சந்திப்பை நடத்தி வருகிறேன். உங்களது கனவுகளை தெரிந்து கொண்டால் எதிர்காலத்தில் அதற்கான திட்டங்களை என்னால் வடிவமைக்க இயலும்.

மூச்சு விடாமல் தண்டால் எடுத்து எடுத்து அசத்திய ராகுல் காந்தி - கன்னியாகுமரியில் மாணவர்களிடையே நெகிழ்ச்சி!

நான் உங்களிடமிருந்து முக்கியமான கருத்துகளை எதிர்பார்க்கிறேன். நீங்கள் உங்கள் சகோதரனிடம் பேசுவது போன்று என்னிடம் சாதாரணமாகவே பேசலாம். அதனை என்னால் புரிந்து கொள்ள முடியும். கேமரா இருக்கிறது, மைக் இருக்கிறது என்று நீங்கள் பயப்பட வேண்டாம். மாணவர்கள் இருப்பதுபோல் மாணவிகளும் சமமாக இருக்கிறார்கள்.

நீங்கள் சொல்கின்ற கருத்துகளை புரிந்து கொண்டால் அது நல்ல செயல்களுக்கு வழிவகுப்பதாக அமையும். எல்லோரும் வேறு வேறு துறைகளில் உயர வேண்டும் என்று நினைக்கிறீர்கள். நல்ல அரசியல் தலைவர்களாக நிறைய வாய்ப்புகள் உள்ளது. ஒரு டீக்கடையில் டீ சாப்பிட்டேன் . அப்போது அங்கிருந்த சிறுவனிடம் நான் பேசினேன், அவன் வானவியல் விஞ்ஞானி ஆக வேண்டும் என்று கூறினேன். இஸ்ரோ தலைவருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதி உள்ளே சென்று பார்க்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தேன். அவரது கனவு நிறைவேற வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையை அவருக்கு அளித்தேன்.

ஒருவேளை இஸ்ரோவுக்கு சென்ற பின்னர் தனக்கு இது பொருத்தமான வாய்ப்பு இல்லை என்ற நிலையையும் அவர் எடுக்கலாம். அவர் ஒரு வானவியல் விஞ்ஞானி ஆக அவரை ஊக்குவிக்க வேண்டியது ஒரு அரசியல் தலைவனின் கடமையாகும். அரசியல் தலைவர்கள் மக்களுக்கு உதவி செய்யக்கூடிய நல்ல தலைவர்களாக உள்ளனர். நல்ல அரசியல் தலைவர்களை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும்.

மூச்சு விடாமல் தண்டால் எடுத்து எடுத்து அசத்திய ராகுல் காந்தி - கன்னியாகுமரியில் மாணவர்களிடையே நெகிழ்ச்சி!

மாணவி ரீனா கூறுகையில், மாநில கல்வித் திட்டத்தில் படித்து நல்ல மதிப்பெண் பெற்று உயர்கல்வியில் சேர முடியவில்லை நீட் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ராகுல், 'நமது கல்வித் துறையின் தூண்கள் ஆசிரியர்களும் மாணவர்களும் தான். இரண்டு பேருமே முக்கியமானவர்கள். ஆசிரியர்கள் இல்லாமல் படிக்க முடியாது, மாணவர்களும் ஆசிரியர்களும் மிகவும் முக்கியமானவர்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

மாணவர்கள் கேட்காமல் திட்டங்களை தயாரித்தால் அது பயனற்றுப் போகும். ‘நீட்' தேர்வு மாணவர்களின் கனவுகளை தகர்க்கக்கூடியது ஆகும் என்பதை நான் உணர்வேன். இது பயனில்லாதது என்பதை நான் கூறுகிறேன். உங்களைப் போன்று நான் மாணவனாக இருந்தபோது அப்படி இரு, இப்படி இரு என்று கூறினால் எனக்கும் எரிச்சல் வரும். அதுபோன்று உங்களை நான் எரிச்சல்படுத்த விரும்பவில்லை' என்றார்.

பிரதமர் மோடியை நேரில் சந்தித்தால் என்ன கேள்வி கேட்பீர்கள் என்று மாணவர் கேட்டார். அதற்கு பதில் அளித்த ராகுல், 'உலகிலேயே 130 கோடி மக்கட்தொகை கொண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. இந்தியா பல்வேறு மொழிகள், கலாச்சாரம், பன்முகத்தன்மை கொண்ட நாடு. எல்லாவற்றிற்கும் நீங்கள் பதில் கூறுகிறீர்கள், எல்லா மக்களும் என்ன விரும்புகிறார்கள் என்பதை தெரிந்துகொண்டு பேசவேண்டும்” என்றார்.

மாணவி கிளாடிஸ், "நம் நாட்டுக்கு மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் தேவைப்பட்டால் என்ன செய்வது?" எனக் கேள்வி எழுப்பினார்.

ராகுல் காந்தி, “நானும் அதைதான் யோசிக்கிறேன். மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் வேண்டும் என்பதுதான் என் கருத்து. அறப்போராட்டமாகவும், அன்பு போராட்டமாகவும் இருக்க வேண்டும். கோபமும், பயமும் மக்களுக்கு இருக்கிறது. எல்லா பிளவுகளும் அகன்று மகிழ்ச்சியான இந்தியா அமைய வேண்டும்” என்றார்.

மூச்சு விடாமல் தண்டால் எடுத்து எடுத்து அசத்திய ராகுல் காந்தி - கன்னியாகுமரியில் மாணவர்களிடையே நெகிழ்ச்சி!

ஒரு மாணவி, "உங்கள் உடலை எப்படி பராமரிப்பு செய்கிறீர்கள்?" எனக் கேட்டார்.

அதற்கு ராகுல் காந்தி கூறுகையில், “ஓடுதல், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல் ஆகிய பயிற்சிகளை செய்கிறேன். அதிகமாக இனிப்பு சாப்பிடுவதில்லை. அரிசி, சப்பாத்தி உணவுகள் அதிகமாக சாப்பிடுவதில்லை. அதிக கொழுப்பு இல்லாத புரோட்டின் உள்ள உணவுகளை சாப்பிடுகிறேன். ஜூடோ, குங்பு பயிற்சியும் செய்கிறேன்.

தினமும் நூறு தண்டால் எடுத்தால் தோள் வலிக்க தொடங்கும். எனவே ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல், தண்டால் என பயிற்சி பெற வேண்டும். கைக்கு, காலுக்கு என தனித்தனியாக பயிற்சி செய்ய வேண்டும். இது போன்ற சமநிலை இந்திய தேசத்திற்கும் வேண்டும். குறைவாகவும் சாப்பிடக்கூடாது, கூடுதலாகவும் சாப்பிடக்கூடாது. நாட்டில் பணக்காரர்களுக்கு மட்டுமே எல்லாம் செய்யக்கூடாது” என்றார்.

பின்னர் மாணவர்களிடம் கலந்துரையாடிய ராகுல் காந்தி ஒரு மாணவியின் வேண்டுகோளுக்கு இணங்க மாணவியுடன் நடனமாடினார். மேலும், உடலைப் பேணுவது குறித்து கேட்ட மாணவி முன்பு 13 முறையும், ஒரு கையால் ஒருமுறையும் தண்டால் எடுத்தார்.

banner

Related Stories

Related Stories