தமிழ்நாடு

கடைசி நேரத்தில் கல்லா கட்டும் எடப்பாடி அரசு : அரசு வேலைக்கு 2 லட்சம் வரை லஞ்சம் பெற்ற அதிமுக பிரமுகர்கள்?

முத்திரைத்தாள் விற்பனையாளர் பணியிடத்திற்கு தலா இரண்டரை லட்சம் லஞ்சம் பெற்று முத்திரைத்தாள் விற்பனையாளர் பணியிட ஒதுக்கீடு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடைசி நேரத்தில் கல்லா கட்டும் எடப்பாடி அரசு : அரசு வேலைக்கு 2 லட்சம் வரை லஞ்சம் பெற்ற அதிமுக பிரமுகர்கள்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழகத்தில் சமீபத்தில் முத்திரைத்தாள் விற்பனையாளர் பணி இடத்திற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதில் ஒவ்வொரு மாவட்ட பதிவுத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சார் பதிவாளர் அலுவலகம் வாரியாக முத்திரைத்தாள் விற்பனையாளர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது. இதில் பலர் விண்ணப்பித்திருந்தனர்.

இந்த நிலையில் விண்ணப்பம் அளித்தவர்கள் செல்போன் எண்ணில் பதிவுத்துறை தலைமை அலுவலகத்திலிருந்து பேசுவதாகவும் குறிப்பிட்ட தொகை கொடுத்தால் முத்திரைத்தாள் விற்பனையாளர் பணியிடம் ஒதுக்கப்படுவதாகவும் சம்பந்தப்பட்டவர்களின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்ட நபர் பேசி வந்தார்.

சம்பந்தப்பட்ட மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு நேர்காணலுக்கு சென்றபோது அவர்களிடம் குறிப்பிட்ட செல்போன் எண்ணை கொடுத்து, இவர் தங்களை தொடர்பு கொள்வார் என்றும் இவரை தொடர்பு கொண்டு பேசி முடிவு செய்து கொள்ளுங்கள் என்றும் கூறியதாக நேர்காணலுக்கு சென்று வந்தவர்கள் தெரிவித்தனர். மேலும் இதில் பலர் அதிமுகவைச் சேர்ந்த பிரமுகர்கள் எனக் கூறப்படுகிறது.

கடைசி நேரத்தில் கல்லா கட்டும் எடப்பாடி அரசு : அரசு வேலைக்கு 2 லட்சம் வரை லஞ்சம் பெற்ற அதிமுக பிரமுகர்கள்?

இந்த நிலையில் மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு நேர்காணலுக்கு சென்றபோது மாவட்ட பதிவாளர் அலுவலகம் மூலம் சம்பந்தப்பட்டவர்களின் விண்ணப்பங்கள் குறிப்பிட்ட நபரிடம் கொடுத்து அவர் மூலம் லஞ்சம் பேரம் பேசிய செல்போன் உரையாடல்கள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே பதிவுத்துறை அலுவலகங்களில் லஞ்சம் புரையோடி உள்ள நிலையில் தகுதியற்றவர்களுக்கு லஞ்சம் பெற்று முத்திரைத்தாள் விற்பனையாளர் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தேர்தல் அறிவிப்பு வெளியான நிலையில் இன்று சனிக்கிழமை திடீரென்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள மாவட்ட பதிவாளர் பதிவு துறை அலுவலகத்தில் கடந்த 25 -2 -2021 தேதியிட்டு தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் ஒட்டப்பட்டுள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விசாரித்தபோது தற்போது முத்திரைத்தாள் விற்பனையாளர் பணியிடம் ஒதுக்கீடு மேலிட உத்தரவுப்படி நடந்ததாகவும், மேலிடத்தில் யார் யார் பணம் கொடுத்தார்கள் என்பதை பொறுத்துதான் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று மாவட்ட பதிவு துறை அலுவலகத்தில் தகவல் கிடைத்தது.

கடைசி நேரத்தில் கல்லா கட்டும் எடப்பாடி அரசு : அரசு வேலைக்கு 2 லட்சம் வரை லஞ்சம் பெற்ற அதிமுக பிரமுகர்கள்?

தற்போது செல்போனில் வெளியான லஞ்ச உரையாடல் மூலம் கன்னியாகுமரி மாவட்ட பதிவாளர் உட்பட உயரதிகாரிகள் லஞ்சம் பெற்று முத்திரைத்தாள் விற்பனையாளர் பணியிட பட்டியல் தயார் செய்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தற்போது முத்திரைத்தாள் விற்பனையாளர் பணியிட ஒதுக்கீட்டில் செல்போன் மூலம் லஞ்சம் கேட்டு வந்த செல்போனில் பேசிய நபர், சென்னை அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், இரண்டரை லட்சம் ரூபாய் கொண்டு வந்தால் உடனடியாக முத்திரைத்தாள் விற்பனையாளர் பணிநியமன ஒதுக்கீடு ஆணை பெற்று செல்லவும் கூறும் ஆடியோவும் அதன் பின்னர் இரண்டு நாட்கள் கழித்து திருநெல்வேலி பதிவுத் துறை துணை தலைவர் அலுவலகத்திற்கு பணத்தை கொண்டுவர கூறுவதும் செல்போன் உரையாடலில் பதிவாகியுள்ளது.

தற்போது லஞ்சம் பெற்று பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்றத்தை செல்போன் உரையாடல்கள் உடன் அணுகப்போவதாகவும், சம்பவத்தில் கீழ்மட்டத்தில் இருந்து மேல்மட்ட வரைக்கும் தொடர்புடைய அதிகாரிகள் மீது முறையான விசாரணை நடத்தி புலன் விசாரணை குழு மூலம் நடவடிக்கை எடுக்க முறையிட போவதாகவும் கூறினர்.

தேர்தல் நேரத்தில் கடைசி கட்டமாக முத்திரைத்தாள் விற்பனையாளர் பணியிடத்திற்கு கல்லா கட்டும் முயற்சியில் மாவட்ட பதிவாளர் முதல் உயர்மட்ட பதிவுத்துறை அதிகாரிகள் வரை லஞ்சம் பெற்ற தகவல் செல்போன் உரையாடல் மூலம் வெளியானது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே உடனடியாக லஞ்சம் பெற்று வெளியிடப்பட்டுள்ள முத்திரைத்தாள் பணியிடத்திற்கான தேர்வு பட்டியலை ரத்து செய்து தகுதியானவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

banner

Related Stories

Related Stories