திமுக அரசு

விதிகளை மீறி ஒவ்வாத அதிகாரிகளை இடமாற்றிய அதிமுக: ‘துக்ளக் தர்பார் நடத்தும் எடப்பாடி’ - திமுக MLA கண்டனம்!

தேர்தல் நேரத்தில் தனக்கு ஒத்துவராத நேர்மையான அதிகாரிகளை இடமாறுதல் செய்வது, காத்திருப்போர் பட்டியலில் வைப்பது, தகுதிக்குறைப்பு செய்வது போன்ற துக்ளக் தர்பார் காட்சிகள் தேர்தல் நேரத்திலும் தொடர்கிறது.

விதிகளை மீறி ஒவ்வாத அதிகாரிகளை இடமாற்றிய அதிமுக: ‘துக்ளக் தர்பார் நடத்தும் எடப்பாடி’ - திமுக MLA கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தேர்தல் அறிவிப்புக்கு பிறகு , கோவை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து, அவசர அவசரமாக 26.02.2021 என்ற முன் தேதியிட்டு 7 உதவி ஆணையாளர்களுக்கும் , 3 நிர்வாக அலுவலர்களுக்கும் நேற்று 27.02.2021 பணியிடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த நியமனங்கள் தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராக இருப்பதால் அத்தகைய பணி இடமாற்றங்களை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து , ரத்து செய்ய வேண்டும் என கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ கோரியுள்ளார்.

இது தொடர்பான அவரது அறிக்கையில், “தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது என இந்திய தேர்தல் ஆணையர் 26.02.2021 அன்று மாலை அறிவித்தார். இதனையடுத்து மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

இந்த நிலையில், தேர்தல் அறிவிப்புக்கு பிறகு, கோவை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிராக , அவசர அவசரமாக 26.02.2021 என்ற முன் தேதியிட்டு 7 உதவி ஆணையாளர்களுக்கும் , 3 நிர்வாக அலுவலர்களுக்கும் நேற்று 27.02.2021 பணியிடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

கோவையில் அதிக அளவிலான அதிகாரிகள் இடமாற்றம் என்பது, தேர்தலை அமைதியாகவும், சுமுகமாகவும் நடத்த உதவாது. தேர்தலுக்கு நான்கு வாரங்களே உள்ளதால், முக்கிய பொறுப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்டவர்களால் தேர்தல் ஏற்பாடுகளை விரைவாக செய்ய முடியாது.

அதிமுக அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது. கோவையில் சட்டசபை தேர்தல் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெறுவதில் சந்தேகம் எழுந்துள்ளது. கோவையில் தேர்தலை நேர்மையாக நடத்த தேவையான அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

அதிமுக ஆட்சியில் நேர்மையான அரசு ஊழியர்கள் தொடர்ந்து பந்தாடப்பட்டு வருவது, உயர் அதிகாரிகள் மத்தியில் கடும் அதிருப்தியையும், மனச்சோர்வையும் ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் நேரத்தில் தனக்கு ஒத்துவராத நேர்மையான அதிகாரிகளை இடமாறுதல் செய்வது, காத்திருப்போர் பட்டியலில் வைப்பது, தகுதிக்குறைப்பு செய்வது போன்ற துக்ளக் தர்பார் காட்சிகள் தேர்தல் நேரத்திலும் தொடர்கிறது.

சட்டசபை தேர்தல் தேதி அறிவித்த பிறகு கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தாங்க முடியாத தலையீடுகளையும் அழுத்தங்களையும் தொடர்ந்து தனக்கு வேண்டிய அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து தேர்தல் நேர சுய லாபத்திற்காக, ஆளும்தரப்பை குளிர்விக்கும் அதிகாரிகள் , தேவையான பதவிக்கு நியமிக்கப் பட்டுள்ளார்கள்.

இந்த நியமனங்கள் தேர்தல் விதிமுறைகளுக்கு எதிராக இருப்பதால் அத்தகைய பணி இடமாற்றங்களை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து , ரத்து செய்ய வேண்டும் என்று கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories