தமிழ்நாடு

“திருமணம் செய்வதாக ஏமாற்றி 70 லட்சம் மோசடி செய்த நடிகர் ஆர்யா”- ஜனாதிபதி அலுவலகத்தில் இலங்கை பெண் புகார்!

நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, 70 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாக குடியரசுத் தலைவர், பிரதமர் அலுவலகத்திற்கு புகார் அளித்துள்ள இலங்கை பெண்.

“திருமணம் செய்வதாக ஏமாற்றி 70 லட்சம் மோசடி செய்த நடிகர் ஆர்யா”- ஜனாதிபதி அலுவலகத்தில் இலங்கை பெண் புகார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இலங்கையைச் சேர்ந்தவர் விட்ஜா. இவர் ஜெர்மனி நாட்டின் சுகாதாரத் துறையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, 70 லட்சம் ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியதாக, நடிகர் ஆர்யா மீது பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார் விட்ஜா.

அவரது புகாரில், "ஆர்யாவும், நானும் 3 வருடங்களாகக் காதலித்து வந்தோம். என்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி கொஞ்சம், கொஞ்சமாக என்னிடமிருந்து 70 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். பிறகு என்னை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். மேலும் பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு கேட்டபோது, கொரோனாவால் பட வாய்ப்புகள் இல்லாததால் பண நெருக்கடியில் இருக்கிறேன் எனக் கூறி ஏமாற்றி வருகிறார். இதுகுறித்து கேட்டபோது, அவரது தாயார் என்னை மோசமான வார்த்தைகளால் என்னை திட்டினார்" எனக் குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் விட்ஜா. மேலும், இந்த புகாரில் நடிகர் ஆர்யாவிற்கு பணம் அனுப்பியதற்கான பரிவர்த்தனை ஆதாரங்களையும் இணைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஆர்யா மீது புகார் கொடுத்துள்ளதால், அதனை திரும்ப பெற வேண்டும் எனவும் இல்லை என்றால் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் நடிகர் ஆர்யா தன்னை மிரட்டுவதாகவும் விட்ஜா குற்றம்சாட்டியுள்ளார். இந்த புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சகம், தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. எனவே விரையில் தமிழக அரசு ஆர்யா மீது நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாக விட்ஜா தெரிவித்துள்ளார்.

நடிகர் ஆர்யா மீது இலங்கை பெண் ஒருவர் பண மோசடி புகார் அளித்திருக்கும் சம்பவம் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories