தமிழ்நாடு

தற்காலிக ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்கும் அ.தி.மு.க அரசு - விபத்துக்குள்ளான அரசு பேருந்துகள்!

போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால், தற்காலிக ஓட்டுநர்கள் பேருந்தை ஓட்டி பல்வேறு இடங்களில் விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

தற்காலிக ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்கும் அ.தி.மு.க அரசு - விபத்துக்குள்ளான அரசு பேருந்துகள்!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகம் முழுவதும் மூன்றவாது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, 19 மாத காலமாக நிலுவையில் உள்ள ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக நடத்தித் தீர்வு காண வேண்டும்.

ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 வருட காலமாக வழங்க வேண்டிய பஞ்சப் படியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், 3வது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடைபெற்று வருவதால், தற்காலிக ஓட்டுநர்களை கொண்டு அ.தி.மு.க அரசு பேருந்துகளை இயக்கி வருகிறது. இதனால், ஆங்காங்கே சில இடங்களில் பேருந்துகள் விபத்துக்குள்ளாகி வருகின்றன.

தற்காலிக ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்கும் அ.தி.மு.க அரசு - விபத்துக்குள்ளான அரசு பேருந்துகள்!

அந்தவகையில், சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று, செங்கல்பட்டு அருகே விபத்தில் சிக்கியது. இதேபோல், திருப்பூரில் இருந்து செங்கல்பட்டு வந்த அரசு பேருந்து ஒன்றும் சாலையில் தடுப்புச் சுவர் மீத மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தால் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

இதேபோல் மூன்றாவது நாளான இன்று மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கூடலூர் போன்ற பேருந்து நிலையங்களில் முறையாக மலை பிரதேசங்களில் பேருந்து போன்ற பெரிய வாகனங்களை வாகனங்களை இயக்க முன் அனுபவம் இல்லாத பயிற்சி ஓட்டுனர்களை வைத்து பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

இதனால் பயணிகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உதகை மண்டல அரசு போக்குவரத்துக் கழக தொ.மு.ச மண்டல செயலாளர் நெடுஞ்சாலையின் குற்றம்சாட்டியுள்ளார். தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் , பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்காமல் தமிழக அரசு தொழிலாளர்களை வஞ்சித்து வரும் தமிழக அரசுபயிற்சி இல்லாத ஓட்டுனர்கள் மூலம்பயணிகளின் உயிர்களில் விளையாடுவதாக குற்றம்சாட்டினார்.

banner

Related Stories

Related Stories