தமிழ்நாடு

‘பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ’ என்ற பெயர் நீக்கம் : தமிழர்களின் எதிர்ப்பை அடுத்து பணிந்த மெட்ரோ நிர்வாகம்!

சென்னை மாநகர மெட்ரோவின் தலைமை அலுவலகத்தில் சூட்டப்பட்ட ‘பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ’ என்ற பெயரை நிர்வாகம் நீக்கியுள்ளது.

‘பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ’ என்ற பெயர்  நீக்கம் : தமிழர்களின் எதிர்ப்பை அடுத்து பணிந்த மெட்ரோ நிர்வாகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை கோயம்பேட்டில் சென்னை மாநகர மெட்ரோவின் தலைமை அலுவலகம் உள்ளது. அதன் அருகில் உள்ள பாலத்தில், கடந்த சில நாள்களுக்கு முன்பு ‘பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ’ என்ற பெயரை எழுதியிருந்தனர். இதுதொடர்பாக எந்தவிதமான முன்அறிவிப்பையும், சென்னை மெட்ரோ நிர்வாகம் வெளியிடவில்லை என தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் எனப் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், சென்னை வான்ஊர்தி நிலையத்தில் முன்பு இருந்த அறிஞர் அண்ணா, காமராசர் பெயர்ப் பலகைகளையும் நீக்கியதில் இருந்து தற்போது வரை மீண்டும் வைக்கப்பட்டாத சூழலில், இந்த ‘பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ’ என்ற பெயர் மாற்றம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் யார் அந்த பாஷ்யம் என்பது தமிழக அரசுக்குத் தெரியுமா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அரசியல் கட்சியினர் பலரும் கேள்வி எழுப்பினர்.

‘பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ’ என்ற பெயர்  நீக்கம் : தமிழர்களின் எதிர்ப்பை அடுத்து பணிந்த மெட்ரோ நிர்வாகம்!

இதனிடையே சென்னை மாநகராட்சியோ அரசோ விளக்கம் எதுவும் கொடுக்காத நிலையில், பாஷ்யம் என்பவர் விடுதலைப் போரில் கலந்துகொண்டவர் என தனது பாணியில் தினமலர் கட்டுக்கதை ஒன்றை வெளியிட்டது. தினமலரின் இத்தகைய கட்டுக்கதைக்கு பதிலடிக்கொடுக்கும் வகையில், பாஷ்யம் என்ற விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்ட வீரரின் பெயரை வைக்கவில்லை என்றும், அது கட்டுமான நிறுவனத்தின் பெயர் என்றும் பலர் பதிலடி கொடுத்தனர்.

அதுமட்டுமல்லாது, பாஷ்யம் நிறுவனம் அந்தப் பகுதியில் ஒரு குடியிருப்பு ஒன்றைக் கட்டுவதாகவும், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் சில பராமரிப்புப் பணிகளைச் செய்துவருவதாகவும், அதனால் தங்கள் நிறுவனத்தின் பெயரை, நிலையத்திற்குச் சூட்டி விட்டார்கள் என்றும் மெட்ரோ அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் இது நடக்காது. இங்கே பெரும் பணம் விளையாடி இருக்கிறது என்றும் குற்றம் சாட்டினார்கள்.

இந்நிலையில் எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்காத சென்னை மாநகராட்சி நிர்வாகம், 15 நாட்களுக்குப் பிறகு, தற்போது ‘பாஷ்யம் கோயம்பேடு மெட்ரோ’ என்ற பெயரை நீக்கியுள்ளது. தமிழகர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை அடுத்து மெட்ரோ நிர்வாகம் மற்றும் மாநகராட்சி பணிந்துள்ளது பல்வேறு தரப்பினரிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories