தமிழ்நாடு

“நீங்கபாட்டுக்கு பேசுங்க; நாங்க கெளம்புறோம்” - பல்லடத்தில் முதல்வரின் பிரச்சாரத்தின்போது நிகழ்ந்த கூத்து!

பல்லடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுவதை பொருட்படுத்தாமல் மக்கள் கலைந்து சென்று கொண்டிருந்ததால் அ.தி.மு.கவினர் அதிர்ச்சியடைந்தனர்.

“நீங்கபாட்டுக்கு பேசுங்க; நாங்க கெளம்புறோம்” - பல்லடத்தில் முதல்வரின் பிரச்சாரத்தின்போது நிகழ்ந்த கூத்து!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுவதை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் கலைந்து சென்று கொண்டிருந்ததால் அ.தி.மு.கவினர் அதிர்ச்சியடைந்தனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

அந்த வகையில், பல்லடம் பேருந்து நிலையம் அருகே திறந்த வேனில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். ஆனால் பழனிசாமி பேசுவதை கொஞ்சமும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக பிரச்சார வேனை கடந்து சென்றனர்.

அ.தி.மு.க பலமிக்க பகுதி என அ.தி.மு.க-வினராலேயே முன்வைக்கப்படும் கொங்கு மண்டலத்தின் பல்லடத்தியிலேயே முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சை மக்கள் பொருட்படுத்தாமல் கலைந்து சென்றது அ.தி.மு.க-வினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் பல இடங்களிலும், முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட அ.தி.மு.க-வினருக்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு இல்லாத நிலையில், கொங்கு மண்டல மக்களும் புறக்கணித்திருப்பது அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

banner

Related Stories

Related Stories