தமிழ்நாடு

மோடிக்கு சிறப்பான செய்கையைத் தொடங்கிய தமிழர்கள் : Twitter ட்ரெண்டிங்கில் #GoBackModi

பிரதமர் நரேந்திர மோடி நாளை தமிழகம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றே #GoBackModi ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.

மோடிக்கு சிறப்பான செய்கையைத் தொடங்கிய தமிழர்கள் : Twitter ட்ரெண்டிங்கில் #GoBackModi
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் சில திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக டெல்லியிலிருந்து விமானம் மூலம் நாளை காலை சென்னை வருகிறார்.

காலை 11 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் சேவை, சென்னைக் கடற்கரை முதல் அத்திப்பட்டு வரையிலான நான்காவது ரயில்பாதை, விழுப்புரம் - தஞ்சாவூர் - திருவாரூர் மின் மயமாக்கப்பட்ட ரயில் பாதை உள்ளிட்ட திட்டங்களைத் துவக்கிவைக்கிறார்.

இந்நிலையில், மோடி தமிழகம் வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக இன்று காலையிலிருந்த #GoBackModi என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது. முதலில் சென்னை அளவில் டிரெண்ட் ஆன இந்த ஹேஷ்டேக், பிறகு இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.

மோடிக்கு சிறப்பான செய்கையைத் தொடங்கிய தமிழர்கள் : Twitter ட்ரெண்டிங்கில் #GoBackModi

மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள விவசாய விரோத வேளாண் சட்டங்களை எதிர்க்கும் விதமாகவும், தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வருவதை எதிர்த்தும், குடியுரிமை திருத்தச் சட்டப் பணிகள் மீண்டும் துவங்கப்படும் என அமித்ஷா சொன்னதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

இந்த வரிசையில், நடிகை ஓவியாவும் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக #GoBackModi என ட்வீட் செய்திருந்தார். இதை அவரது ரசிகர்கள் பலர் ரீ-ட்வீட் செய்திருந்தனர். மேலும் ஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவும் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருத்தோவியம் வரைந்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

தமிழர் விரோத பிரதமர் மோடி எப்போது தமிழ்நாடு வந்தாலும் #GoBackModi ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories