தமிழ்நாடு

“நீங்க சமைப்பீங்களா?” : நெறியாளரின் கேள்விக்கு அசத்தலான பதிலடி கொடுத்த கனிமொழி MP - பாராட்டும் பெண்கள்!

கனிமொழி எம்.பி-யிடம் நேர்காணலின்போது கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, அவர் பதிலளித்த விதம் சமூகவலைதளவாசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

File image
File image
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

தி.மு.க மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி-யிடம் நேர்காணலின்போது கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, அவர் பதிலளித்த விதம் சமூகவலைதளவாசிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தனியார் செய்தித் தொலைக்காட்சியின் நெறியாளர், தி.மு.க மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி.,-யிடம் அவரது தனிப்பட்ட வாழ்க்கை, அரசியல் பயணம் குறித்து நடத்திய நேர்காணலின்போது, “நீங்கள் சமைப்பீர்களா?” எனக் கேள்வி எழுப்பினார்.

உடனே, “இந்தக் கேள்வியை ஏன் நீங்கள் அரசியல் களத்தில் செயல்படும் ஆண்களிடம் பேட்டி எடுக்கும்போது கேட்பதில்லை?” என எதிர்க் கேள்வி எழுப்பினார் கனிமொழி எம்.பி.,

கனிமொழியின் எதிர்வினையால் நிலைகுலைந்த நெறியாளர், முக்கிய கட்சியில் பெரிய பொறுப்பில், நாடாளுமன்ற மக்களவைக் குழு துணைத் தலைவர் பொறுப்பில் இருக்கிறீர்கள்; நீங்களும் வீட்டில் சமைப்பீர்களா என அறிந்துகொள்வதற்காகக் கேட்டதாகத் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த கனிமொழி எம்.பி., “எனது அப்பா முதலமைச்சராகவே பணியாற்றி இருக்கிறார். அவரிடம் ஏன் நீங்கள் இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை” எனப் புன்னைகையுடனே கேட்டார்.

நெறியாளரின் கேள்விக்கு கனிமொழி எம்.பி. அளித்த பதிலடி குறித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சமூக வலைதளங்களில் இயங்கும் பெண்கள் பலரும் கனிமொழியின் இந்த எதிர்வினையைப் பாராட்டியுள்ளனர்.

இதுகுறித்து ட்விட்டர்வாசி ஒருவர், “பெரியாரைப் படியுங்கள், அம்பேத்கரைப் படியுங்கள். உங்கள் முழு சிந்தனையும் நன்மைக்கானதாக மாறும். பெண்களை அடிமைப்படுத்தும் சங்கிலிகள் அனைத்தும் உடையும். இதற்கு கனிமொழி ஒரு சிறந்த உதாரணம். நேர்காணல் செய்பவரின் ஆணாதிக்க கேள்விக்கு நுட்பமான புன்னகையுடன் பதிலடி கொடுக்கிறார்” எனக் குறிப்பிட்டு இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

banner

Related Stories

Related Stories