தமிழ்நாடு

“உத்திரமேரூர் அருகே சட்டவிரோதமாக இயங்கிய கல்குவாரி”: பாறைகள் சரிந்து 4 பேர் பலி - தொடரும் மீட்பு பணிகள்!

உத்திரமேரூர் அருகே கல் குவாரியில் கற்கள் சரிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர்.

“உத்திரமேரூர் அருகே சட்டவிரோதமாக இயங்கிய கல்குவாரி”: பாறைகள் சரிந்து 4 பேர் பலி - தொடரும் மீட்பு பணிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே திருமுக்கூடலை அடுத்த மதூர் கிராமத்தில் தனியார் சொந்தமான கல்குவாரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியில், வியாழனன்று காலை வழக்கம்போல் கல் உடைப்பு, கற்களை லாரியில் ஏற்றி அனுப்பும் பணிகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, திடீரென கல்குவாரி மலையின் ஒருபகுதி பெரும் சத்தத்துடன் சரிந்ததாக கூறப்படுகிறது. அங்கிருந்த தொழிலாளர்கள் அச்சத்துடன் அங்கிருந்து ஓடினர். எனினும், ஜே.சி.பி மற்றும் லாரி என 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பாறைகளின் இடிபாடுகளில் சிக்கின.

மேலும், தொழிலாளர் 2 பேர் மலைச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். அவரின் உடலை சக தொழிலாளர்கள் மீட்டனர். மேலும் படுகாயமடைந்த இருவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கல்குவாரி இடிபாடுகளில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரோடு புதைந்து சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

“உத்திரமேரூர் அருகே சட்டவிரோதமாக இயங்கிய கல்குவாரி”: பாறைகள் சரிந்து 4 பேர் பலி - தொடரும் மீட்பு பணிகள்!

தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களு டன் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர்கள் உள்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தில் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மீட்புப்பணிகள் முழுமையாக நடந்து முடிந்தால்தான் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தெரியவரும்.

சட்டவிரோதமாக நடைபெற்று வரும் கல்குவாரிகளை மூட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மக்களை திரட்டி பல முறை போராட்டங்களை நடத்தியுள்ளனர். இதுகுறித்து பல முறைமாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனுக்களும் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், கனிமம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டியதால் இந்த கல்குவாரியால் சாலையில் மட்டுமல்ல குவாரிக்குள்ளேயும் அடிக்கடி விபத்து நடந்துள்ளதையும் கிராம மக்கள் பட்டியலிடுகின்றனர். சம்பவம் நடந்துள்ள பகுதிக்கு மாவட்ட ஆட்சியர் வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உயிரிழந்த தொழிலாளி குடும்பத்திற்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்றும் மதூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

banner

Related Stories

Related Stories