இந்தியா

“எதிலும் எந்த நிலைப்பாட்டையும் எடுக்காதவர்கள், திடீரென ஒரே ஸ்ருதியில் பாடுகிறார்கள்” - சித்தார்த் தாக்கு!

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்கிற ரீதியில் கருத்து தெரிவித்த இந்திய பிரபலங்களை டாப்ஸி, இர்ஃபான் பதான், சித்தார்த் ஆகியோர் விமர்சித்துள்ளனர்.

“எதிலும் எந்த நிலைப்பாட்டையும் எடுக்காதவர்கள், திடீரென ஒரே ஸ்ருதியில் பாடுகிறார்கள்” - சித்தார்த் தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்கிற ரீதியில் கருத்து தெரிவித்த இந்திய பிரபலங்களை டாப்ஸி, இர்ஃபான் பதான், சித்தார்த் ஆகியோர் விமர்சித்துள்ளனர்.

பா.ஜ.க அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் 2 மாதங்களுக்கும் மேலாகத் தொடரும் நிலையில், உலகளவில் பிரபலமானவர்களின் கருத்துகளால் இந்த விவகாரம் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், உலகம் முழுவதும் இருந்து பல்வேறு குரல்கள் எழுந்து வருகின்றன. இதுதொடர்பாக, புகழ்பெற்ற பாடகி ரிஹான்னா, சூழலியல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க், நடிகை மியா கலிஃபா உள்ளிட்ட சிலர் தெரிவித்த கருத்துகள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தன.

ரிஹான்னா, கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்டோரின் கருத்துகளுக்கு நடிகை கங்கனா ரனாவத், கிரிக்கெட்டர்கள் சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே, விராட் கோலி, நடிகர் அக்‌ஷய் குமார் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

“எதிலும் எந்த நிலைப்பாட்டையும் எடுக்காதவர்கள், திடீரென ஒரே ஸ்ருதியில் பாடுகிறார்கள்” - சித்தார்த் தாக்கு!

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்கிற ரீதியில் இந்திய பிரபலங்கள் பலரும் பதிவிட்டு வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அவர்களுக்கு பதிலடியாக ட்வீட் செய்துள்ள நடிகை டாப்ஸி, “ஒரு ட்வீட் ஒற்றுமையைக் குலைக்குமானால், ஒரு நகைச்சுவை உங்கள் நம்பிக்கையை மாற்றுமானால், ஒரு நிகழ்ச்சி உங்கள் மத நம்பிக்கையை குலைக்குமானால், நீங்கள்தான் உங்களின் மதிப்பினை மறு பரிசீலனை செய்யவேண்டும். மற்றவர்களுக்கு பாடமெடுக்கும் பிரச்சாரகர்களாக மாறக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் எனக் கூறிய இந்திய பிரபலங்களைச் சாடும் வகையில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர், “அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் ஒரு போலிஸ்காரரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டபோது, நமது நாடு தனது வருத்தத்தைச் சரியாக வெளிப்படுத்தியது. #justsaying” எனக் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து பதிவிட்டுள்ள நடிகர் சித்தார்த், “உங்கள் ஹீரோக்களை கவனமாக, அறிவுப்பூர்வமாக தேர்ந்தெடுங்கள். கல்வி, அன்பு, நேர்மை மற்றும் கொஞ்சம் முதுகெலும்புடன் நடந்துகொள்ளும் தன்மையும்தான் தேவை. எந்த நிலைப்பாட்டையும் எதிலும் எடுக்காதவர்கள், திடீரென ஒரே ஸ்ருதியில் பாடுகிறார்கள். இதுதான் இவர்களின் பிரச்சாரம்” எனக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories