தமிழ்நாடு

'மத மோதலை தூண்டும் பா.ஜ.க கல்யாணராமனுக்கு கடுமையான சட்டத்தின் கீழ் தண்டனை'- ஜமாஅத்துல் உலமா சபை கோரிக்கை!

சட்டம் ஒழுங்கை திட்டமிட்டு சீர்கெடுக்கும் விதத்திலும் அமைதியை சீர்குலைக்கும் விதத்திலும் பேசி வரும் பா.ஜ.க.,வின் கல்யாணராமனை கடுமையான சட்டத்தின் கீழ் தண்டிக்க கோரி ஜமாஅத்துல் உலமாக்கள் சபை புகார்.

'மத மோதலை தூண்டும் பா.ஜ.க கல்யாணராமனுக்கு கடுமையான சட்டத்தின் கீழ் தண்டனை'- ஜமாஅத்துல் உலமா சபை கோரிக்கை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் மதமோதலைத் தூண்டும் நோக்கத்தில் திட்டமிட்டு பேசி வரும் பாஜக பிரமுகர் கல்யாண ராமன் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமாக்கள் சபை சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை திட்டமிட்டு சீர்கெடுக்கும் விதத்திலும் அமைதியை சீர்குலைக்கும் விதத்திலும் நாங்கள் எங்கள் உயிரை விட மேலாக மதிக்கும் முஹம்மது நபி ஸல் அவர்களை மிகவும் கேவலமாகவும் கேலியாகவும் பாஜக பிரமுகர் கல்யாண ராமன் பேசியுள்ளார்.

தொடர்ந்து பல இடங்களிலும் அவதூறாக பேசிவரும் பாஜக பிரமுகர் கல்யாண ராமனை கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்து உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறும் வருங்காலத்தில் இதுபோன்ற தீய நிகழ்வுகள் தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் நிகழாமல் தடுக்குமாறும் தமிழக அரசையும் காவல் துறையையும் தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை சார்பில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த உலமாக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

banner

Related Stories

Related Stories