தமிழ்நாடு

“உதயநிதி ஒரேநாளில் வந்தவரல்ல; வாரிசு அரசியல் என்பது உள்நோக்கத்தோடு சொல்லப்படுவது”: மு.க.ஸ்டாலின் கருத்து!

வாரிசு அரசியல் என்பது அரசியல் நோக்கத்தோடு சொல்லப்படுகின்ற ஒரு கருத்து என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“உதயநிதி ஒரேநாளில் வந்தவரல்ல; வாரிசு அரசியல் என்பது உள்நோக்கத்தோடு சொல்லப்படுவது”: மு.க.ஸ்டாலின் கருத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

‘இந்தியா டுடே’ ஆங்கில செய்தித் தொலைக்காட்சிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புப் பேட்டி அளித்தார்.

தமிழ்நாடு அடுத்த முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் களத்திற்குத் தயாராகி வருகிறது. தமிழ்நாட்டின் முக்கிய தலைவராக இருந்த கலைஞர் அவர்களின் முகமாகத் திகழும் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத் தலைவர் மட்டுமல்லாது முக்கிய தேசிய தலைவராகவும் உருவெடுத்து வருகிறார்; அவர் வேலூர் தேர்தல் பிரச்சாரத்திற்கிடையே “இந்தியா டுடே’’ இதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணலின் தமிழாக்கம் வருமாறு: பகுதி - 3 :

கேள்வி: உதயநிதி அவர்களுக்கு இளைஞரணியில் பதவி கொடுத்திருக்கிறீர்கள்; அவர் நல்ல ஸ்டார் கேம்பைனர் என்ற பெயரும் இருக்கிறது. அடுத்து தி.மு.க ஆட்சிக்கு வந்தாலும், தி.மு.க. கட்சியில் அவருக்கான எதிர்காலம் என்னவாக இருக்கும்? அதேசமயத்தில், அ.தி.மு.க., பா.ஜ.க ஆகியவை உங்கள் மீது வைக்கும் ஒரு குற்றச்சாட்டு வாரிசு அரசியல் என்று சொல்கிறார்களே?

மு.க.ஸ்டாலின்: அரசியல் நோக்கத்தோடு சொல்லப்படுகின்ற ஒரு கருத்து. என்னையும் வாரிசு, வாரிசு என்று சொன்னார்கள். படிப்படியாக நானாக வளர்ந்து வந்திருக்கிறேன். அதுபோன்று, உதயநிதியைப் பொறுத்தவரையில், எப்படி மற்ற கட்சித் தோழர்கள், கட்சியில் இருக்கக்கூடிய நிர்வாகிகள், படிப்படியாக வளர்ந்து வந்து இன்றைக்கு ஒரு நல்ல நிலைமைக்கு வந்திருக்கிறார்களோ, அதுபோன்றுதான், துறைமுகம் தொகுதி, சேப்பாக்கம் தொகுதியில் தலைவர் அவர்கள் நிற்கும்பொழுதும் நான் ஆயிரம் விளக்கு தொகுதியில் வேட்பாளராக நிற்கும் பொழுதும் தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறார். அதற்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்திருக்கிறார்.

“உதயநிதி ஒரேநாளில் வந்தவரல்ல; வாரிசு அரசியல் என்பது உள்நோக்கத்தோடு சொல்லப்படுவது”: மு.க.ஸ்டாலின் கருத்து!

தி.மு.க முன்னெடுத்த ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ போன்ற பிரச்சாரங்களில் அவர் பங்கேற்று அவருடைய பணியை செய்து கொண்டிருக்கிறார். இளைஞரணி பொறுப்பிற்கு வந்த பிறகு, இளைஞரணிக்கு ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்துகின்ற பணிகளை செய்துகொண்டிருக்கிறார். யார் வளர்ந்து வந்தாலும், இந்தக்கட்சியைப் பொறுத்தவரையில், முக்கிய பொறுப்பிற்கு, முக்கிய இடத்திற்கு வரக்கூடிய வாய்ப்பு நிச்சயம் உண்டு. அப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது; இனிமேலும் அப்படித்தான் இருக்கும்.

அரசியல் வாரிசு என்று சொல்லிக்கொண்டிருக்கின்ற அ.தி.மு.கவைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வத்தினுடைய மகன்; ஜெயக்குமாருடைய மகன் ஆகியோர் கட்சிப்பணியை செய்யாமல், நேரிடையாக வந்தது வாரிசு அரசியலாக தெரியலாமே தவிர, தி.மு.க.வைப் பொறுத்தவரைக்கும் அப்படி நடக்கவே நடக்காது.

கேள்வி: கடந்த 10 நாள்களுக்கு முன்பு கமலஹாசன் அவர்கள் எங்களுக்கு அளித்த பேட்டியில், அ.தி.மு.க.வுக்கு எதிராக நிறையப் பேசினார்; தி.மு.கவைப்பற்றி பேசவேயில்லை. ஆகவே, தேர்தலுக்குப் பிறகு, அவருடைய கட்சியோடு கூட்டணி அமைக்கின்ற வாய்ப்புகள் இருக்கிறதா?

மு.க.ஸ்டாலின்: தி.மு.க.வைப்பற்றி பேசுவதற்கு அவசியமில்லையே! தி.மு.க இப்பொழுது ஆட்சியில் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.கதான் ஆட்சியில் இருக்கிறது. அ.தி.மு.கவின் ஆட்சியைப்பற்றி நாங்கள் அல்ல - நாடே தெரிந்துவைத்துக் கொண்டிருக்கிறது. ஆகவே, தி.மு.கவைப்பற்றி பேசுவதற்கான வாய்ப்பே கிடையாது. அவசியமும் கிடையாது. ஆட்சியில் இருக்கக்கூடிய அ.தி.மு.க செய்திருக்கின்ற ஊழல் வெட்ட வெளிச்சமாக இருக்கிறது; அதனால், தான் கமலஹாசன் சொல்லியிருக்கிறார்.

“உதயநிதி ஒரேநாளில் வந்தவரல்ல; வாரிசு அரசியல் என்பது உள்நோக்கத்தோடு சொல்லப்படுவது”: மு.க.ஸ்டாலின் கருத்து!

கேள்வி: காங்கிரசோடு கூட்டணி புதுச்சேரியைப் பொறுத்தவரையில் ஒரு சலசலப்பு ஏற்பட்டு இருக்கிறது; தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், 2014இல் அதிகமான இடங்களைக்கேட்டு, பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், இந்தமுறை, தி.மு.க மிகவும் ஸ்ட்ராங்கான கட்சியாக இருக்கின்ற ஒரு சூழலில், தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு எவ்வளவு இடங்கள் ஒதுக்கப்படும் என்ற திட்டம் ஏதாவது இருக்கிறதா?

மு.க.ஸ்டாலின்: பாண்டிச்சேரியைப் பொறுத்தவரையில், அரசியல் சூழ்நிலையே வேறு. தமிழ்நாட்டோடு அதனை ஒப்பிட்டுப்பேசக் கூடாது. இருந்தாலும், தொடர்ந்து காங்கிரசோடு கூட்டணி வைத்துக்கொண்டு பாண்டிச்சேரியிலும், தமிழ்நாட்டிலும் தேர்தலை சந்தித்திருக்கின்றோம். பல நேரங்களில், பாண்டிச்சேரியில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும்; தி.மு.க. தனித்துப் போட்டியிடும்.

அதுபோன்ற சூழ்நிலையில், யார் அதிக இடங்களில் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள்தான் முதலமைச்சராக பதவியேற்கக் கூடிய வாய்ப்பு ஏற்படும். அதுபோன்ற நிலை வரவேண்டும் என்று தான் பாண்டிச்சேரியில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தினர் விரும்புகிறார்கள். ஆனால், தலைமைக் கழகம் இன்னும் எந்தமுடிவும் எடுக்கவில்லை. கலந்து பேசிதான் முடிவெடுப்போம். தலைமைக்குக் கட்டுப்பட்டுத்தான் அவர்கள் நடப்பார்கள்.

கேள்வி: தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில்..?

மு.க.ஸ்டாலின்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், நாடாளுமன்றத் தேர்தலிருந்து, வருகின்ற சட்டமன்றத் தேர்தல் வரையில் சுமூகப் பயணம்தான். நிச்சயமாக கூட்டணி தொடரும்; அதில் எந்தவிதமான மாறுபாடும் இருக்க வாய்ப்பே கிடையாது.

“உதயநிதி ஒரேநாளில் வந்தவரல்ல; வாரிசு அரசியல் என்பது உள்நோக்கத்தோடு சொல்லப்படுவது”: மு.க.ஸ்டாலின் கருத்து!

‘ஒன்றே குலம் - ஒருவனே தேவன்’ என்பதே அண்ணாவின் கொள்கை!

கேள்வி: திருத்தணியில், நீங்கள் வேலோடு நிற்கின்ற படம், பரபரப்பாக, ஒரு வைரலாகி இருக்கிறது; அந்தப் படம் மூலமாக நீங்கள் மக்களுக்குச் சொல்ல விரும்புகின்ற செய்தி என்ன?

மு.க.ஸ்டாலின்: மக்கள்தான் அந்த வேலை எனக்குக் கொடுத்தார்கள். பாராட்டு தெரிவித்து அவர்கள் கொடுத்த வேலை வாங்கினேன்; அப்பொழுது எடுத்த புகைப்படம்தான் அது. அதை நான் வாங்காமல் இருந்திருந்தால், அதைப்பற்றி ஒரு குறை சொல்லியிருப்பார்கள் - அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.

கடவுள் இல்லை என்று நாங்கள் சொல்லவில்லை. கடவுளை யார் கும்பிடுகிறார்களோ, தாராளமாகக் கும்பிடுங்கள். அதில் நாங்கள் யாரும் குறுக்கிடுவதில்லை. இன்னும் சொல்லப்போனால், என்னுடைய மனைவி, 24 மணி நேரத்தில், 20 மணிநேரம் கடவுள், கடவுள் என்று நினைத்துக்கொண்டு, பூஜை செய்து கொண்டிருக்கிறார், சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

அண்ணாவினுடைய கொள்கை என்ன?

ஒன்றே குலம் - ஒருவனே தேவன். அந்தக்கொள்கையில்தான் நாங்கள் இருக்கிறோம். இந்தித் திணிப்பு கூடாது என்பதே தி.மு.க.வின் கருத்து!

கேள்வி: புதிய கல்விக் கொள்கையில், இந்தி, சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது; நீங்கள் இந்தித் திணிப்பிற்கு எதிராகப் போராடியிருக்கிறீர்கள்; இப்பொழுது தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?

மு.க.ஸ்டாலின்: மத்திய அரசின் துறையான ரயில்வே துறை இன்னும் சில துறைகளில் சுற்றறிக்கைகளில் கட்டாயம் இந்தி மொழியில் தான் பேசவேண்டும்; இந்தியில்தான் எழுத வேண்டும் என்று சொன்ன பொழுது, அதற்கு நாங்கள் உடனுக்குடன் எதிர்ப்புத் தெரிவித்தோம்.

உடனே அதனை திரும்பப் பெற்றுக்கொண்டார்கள். அமித்ஷா அவர்கள், இந்திதான் பொதுவான மொழியாக இருக்கவேண்டும் என்று ஒரு கருத்தைத் தெரிவித்தபொழுது, நாங்கள் அதனை எதிர்த்துக் குரல் கொடுத் தோம். மீண்டும் 1965ஆம் ஆண்டை உருவாக்கி விடாதீர்கள் என்று சொன்னோம்; அதற்காக ஒரு போராட்டத்தை நடத்துவோம் என்று நாங்கள் எச்சரிக்கை செய்தோம்.

நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை; உங்களுடைய போராட்டத்தை நிறுத்துங்கள் என்று அவரே ஆளுநரின் மூலம் சொல்லி, ஆளுநர் எங்களை அழைத்துச் சொன்னது எல்லாம் வரலாறு. நாங்கள் இந்தி வேண்டாம் என்று சொல்லவில்லை; இந்தியைத் திணிக்கின்ற முயற்சியில் மத்திய அரசு ஈடுபடக்கூடாது என்பதுதான் எங்களுடைய கருத்து.

“உதயநிதி ஒரேநாளில் வந்தவரல்ல; வாரிசு அரசியல் என்பது உள்நோக்கத்தோடு சொல்லப்படுவது”: மு.க.ஸ்டாலின் கருத்து!

கேள்வி: ஏழு பேர் விடுதலைக்கு ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் அல்லவா? அதற்கு தி.மு.க.வின் பங்கு இருக்கிறது அல்லவா?

மு.க.ஸ்டாலின்: ஆமாம்! தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம்; இப்பொழுதும் சொல்கிறோம். ஜெயலலிதா மரணம் குறித்த உண்மையை மக்களுக்கு சொல்லவில்லை!

கேள்வி: அதேபோன்று, ஜெயலலிதா நினைவிடமாக இருக்கட்டும்; ஏழு பேர் விடுதலை பிரச்சினையில் அ.தி.மு.க தனக்கென்று ஒரு இடத்தை ஏற்படுத்திக்கொள்ளப் பார்க்கிறது என்று பார்க்கிறீர்களா?

மு.க.ஸ்டாலின்: ஜெயலலிதா நினைவிடத்தைப் பற்றி பேசினால், ஏதோ ஜெயலலிதா நினைவிடத்தைக் கட்டக்கூடாது என்று நாங்கள் நினைக்கிறோம் என்று ஒரு பிரச்சாரத்தை செய்வார்கள். ஆகையால், ஏன் நினைவிடம் கட்டினீர்கள் என்று நாங்கள் கேட்கவில்லை. ஆனால், ஜெயலலிதாவினுடைய மர்ம மரணத்தை விசாரித்து, உண்மையை இதுவரை மக்களுக்குச் சொல்லவில்லை. அந்த அம்மா மறைந்து, நான்காண்டுகள் ஆகப்போகிறது; நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைத்து மூன்றே முக்கால் ஆண்டுகள் ஆகிறது.

ஜெயலலிதா மரணத்தில் விசாரணை ஆணையம் வேண்டும் என்று கேட்ட- ஓ.பி.எஸ் அவர்களை, அந்த ஆணையத்தில் ஆஜராகுமாறு பத்து முறை அழைத்தார்கள்; இன்றுவரை அவர் ஆஜராகவில்லை. அந்த உண்மைதான் வெளியில் வரவேண்டும் என்று கேட்கிறோமே தவிர, ஜெயலலிதா நினைவிடத்தைப்பற்றி நாங்கள் எதுவும் சொல்லவில்லை.

செய்தியாளர்: நீங்கள் முதலமைச்சரானால், நீங்கள் கையெழுத்துப் போடும் முதல் அறிவிப்பு என்னவாக இருக்கும்?

மு.க.ஸ்டாலின்: பொதுமக்கள் எதை அதிகமாக விரும்புகிறார்களோ, அதற்காகத் தான் முதல் கையெழுத்துப் போடுவேன்.” இவ்வாறு தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார்.

banner

Related Stories

Related Stories