தமிழ்நாடு

“அண்ணா, எம்.ஜி.ஆருடன் பழகிய இன்றைய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டும்தான்” : ‘இந்தியா டுடே’ புகழாரம்!

“இன்றைக்கு இருக்கும் தலைவர்களில் அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோருடன் பழகிய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டும்தான்” என மு.க.ஸ்டாலினுடனான நேர்காணலில், ‘இந்தியா டுடே’ ஆங்கில தொலைக்காட்சி புகழாரம் சூட்டியுள்ளது.

“அண்ணா, எம்.ஜி.ஆருடன் பழகிய இன்றைய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டும்தான்” : ‘இந்தியா டுடே’ புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

“இன்றைக்கு இருக்கக்கூடிய தலைவர்களில் அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோருடன் பழகிய ஒரே தலைவர் ஸ்டாலின் மட்டும் தான்’’ என்று தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுடனான நேர்காணலில் ‘இந்தியா டுடே’ ஆங்கில தொலைக்காட்சி புகழாரம் சூட்டியுள்ளது.

‘இந்தியா டுடே’ ஆங்கில செய்தித் தொலைக்காட்சிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்புப் பேட்டி அளித்தார்.

தமிழ்நாடு அடுத்த முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல் களத்திற்குத் தயாராகி வருகிறது. தமிழ்நாட்டின் முக்கிய தலைவராக இருந்த கலைஞர் அவர்களின் முகமாகத் திகழும் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத் தலைவர் மட்டுமல்லாது முக்கிய தேசிய தலைவராகவும் உருவெடுத்து வருகிறார்; அவர் வேலூர் தேர்தல் பிரச்சாரத்திற்கிடையே “இந்தியா டுடே’’ இதழுக்கு அளித்த சிறப்பு நேர்காணலின் தமிழாக்கம் வருமாறு :

ப்ரியம்வதா : ‘இந்தியா டுடே’ ஆங்கில தொலைக்காட்சி சார்பாக உங்களை வரவேற்கிறேன்.

கேள்வி: இந்தப் படத்தைப் பார்த்தவுடன் உங்களுக்கு என்ன ஞாபகத்திற்கு வருகிறது?

1971 தேர்தலுக்காக - இளைஞர் அணி சார்பில் `முரசே முழங்கு’ பிரச்சார நாடகத்தின்போது எடுத்த படம்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் : இந்தப் படம் 197இல் அண்ணா அவர்களுடைய மறைவிற்குப் பிறகு, தலைவர் தலைமையில், சட்டமன்றப் பொதுத் தேர்தலை எதிர்கொண்டோம். அந்தத் தேர்தலில் 184 இடங்களில் வெற்றி பெற்றோம். அதுவரைக்கும் எந்த ஆளும்கட்சியும் 184 இடங்களில் வெற்றி பெறவில்லை. அது ஒரு பெரிய சாதனை; இன்று வரையிலும் அந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை.

“அண்ணா, எம்.ஜி.ஆருடன் பழகிய இன்றைய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டும்தான்” : ‘இந்தியா டுடே’ புகழாரம்!

அந்தத் தேர்தலுக்காக நான் இளைஞரணி சார்பில் பிரச்சார நாடகமான ‘‘முரசே முழங்கு'' என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் நடத்தினோம். தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, வெற்றி விழாக் கூட்டத்தை என்.கே.டி.கலா மண்டபத்தில் நடத்தினோம். அந்தக் கூட்டத்தில் நடைபெற்ற நாடகத்தினுடைய நிறைவு விழாவில் எடுக்கப்பட்ட படம்தான் இந்த புகைப்படம். அந்த வெற்றி விழாக் கூட்டத்தில், நாடகத்தில் நடித்த எங்களுக்கெல்லாம் தலைவர் மோதிரம் அணிவித்தார். எம்.ஜி.ஆர் கட்சியின் பொருளாளர். அவர் எங்களுக்கெல்லாம் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

எம்.ஜி.ஆர் அப்பொழுது எனக்கு அறிவுரை வழங்கி, வாழ்த்திப் பேசும்பொழுது, ‘‘நான் அப்பா ஸ்தானத்தில் அல்ல - பெரியப்பா ஸ்தானத்தில் இருந்து உனக்கு அறிவுரை சொல்கிறேன்; இதையெல்லாம் நீ கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு, உன்னுடைய படிப்பில் கவனம் செலுத்தி, படித்து முன்னேறி வந்து - பிறகு இத்துறைக்கு வரவேண்டும். அது தான் என்னுடைய ஆசை. உன்னுடைய பணிமிகவும் பாராட்டுக்குரியது, மகிழ்ச்சிக்குரியது. உன்னுடைய அப்பா இதை சொல்லாவிட்டாலும், பெரியப்பா நிலையில் இருந்து நான் சொல்கிறேன்'' என்றார்.

அந்த நிகழ்வு எனக்கு இன்னும் பசுமையாக என் நினைவில் இருக்கிறது. ‘‘முரசே முழங்கு'' நாடகத்தின் அரங்கேற்றம் சைதாப்பேட்டையில் ஒரு தெருவில் நடத்தினோம். அங்கே ஒரு நாற்காலி போட்டு எம்.ஜி.ஆர். அவர்களை அமரவைத்தோம். அவர்தான் அந்த நாடகத்திற்குத் தலைமை தாங்கினார். பொதுமக்களுக்கு நாடகம் பார்ப்பதற்கு இடையூறாக இருக்கிறது என்பதற்காக கீழே அமர்ந்து நாடகத்தைப் பார்த்தார். அந்தப் புகைப்படங்கள் எல்லாம் என்னிடம் இருக்கிறது.

“அண்ணா, எம்.ஜி.ஆருடன் பழகிய இன்றைய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டும்தான்” : ‘இந்தியா டுடே’ புகழாரம்!

கேள்வி: எம்.ஜி.ஆர் அவர்களை இன்றைக்கு எல்லோரும் சொந்தம் கொண்டாடுகிறார்கள்; நீங்கள் அவரோடு இவ்வளவு இணக்கமாக இருந்திருக்கிறீர்கள். அதுமட்டுமல்லாமல், அண்ணா அவர்களோடு பழகிய, இன்றைக்கு இருக்கக்கூடிய தலைவர்களில், ஒரே தலைவர் நீங்கள் மட்டும்தான்.

1949 ஆம் ஆண்டு கொட்டும் மழையில் அண்ணா அவர்கள் ராபின்சன் பூங்காவில் ஆற்றிய உரையை யாராலும் மறக்க முடியாது. தி.மு.க. ஏன் பிறந்தது? என்று. அண்ணா அவர்கள் உங்களுக்குக் கொடுத்த அறிவுரை; அவருக்குப் பிறகு உங்களுடைய அப்பா கலைஞர் அவர்கள் உங்களுக்குக் கொடுத்த அறிவுரை - இவர்கள் கொடுத்த எந்த அறிவுரைகளை இன்றுவரை பொது வாழ்க்கையில் நீங்கள் பயன்படுத்துகிறீர்கள்?

மு.க.ஸ்டாலின்: அண்ணாவைப் பொறுத்தவரையில், நான் சிறிய வயதில் பள்ளிக்கூடம் படிக்கின்ற காலத்திலிருந்து அவரோடு நெருக்கம் உண்டு உரிமையோடு ‘‘வாடா, போடா'' என்றுதான் அழைப்பார். பெரும்பாலும், தலைவர் வீட்டிலும், பேராசிரியர் வீட்டிலும்தான் அண்ணா அவர்கள் தூங்கி ஓய்வெடுப்பார்.

அப்பொழுது அவருக்கு, காபி, டீ, பக்கோடா போன்றவற்றை ராயப்பேட்டையில் கே.எஃப்.அமீன் ஓட்டலுக்கு நான் கோபாலபுரத்திலிருந்து சைக்கிளில் சென்று வாங்கி வருவேன்; சில சமயம் நடந்தே செல்வேன். வாங்கியது போக, மிச்சம் 50 பைசா கிடைக்கும். அதை நாங்கள் கமிசன் போன்று எடுத்துக் கொள்வோம். பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்த பொழுது கோபாலபுரத்தில் இருக்கின்ற ஒரு சலூன் கடையில், நண்பர்களை வைத்து இளைஞர் தி.மு.க. என்ற பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கினோம்.

“அண்ணா, எம்.ஜி.ஆருடன் பழகிய இன்றைய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டும்தான்” : ‘இந்தியா டுடே’ புகழாரம்!

இன்றைக்கும் என் மனதில் இருக்கும் குறை!

இளைஞர் தி.மு.க சார்பாக, அண்ணாவின் பிறந்த நாள் விழாவினைநடத்தினோம். அப்பொழுது அண்ணா அவர்கள் முதலமைச்சராகி ஓராண்டு ஆகியிருந்தது. அப்பொழுது அவருக்கு சற்று உடல்நிலை சரியில்லாத சூழலில், வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். நாங்கள் எல்லாம் அவருடைய வீட்டிற்குச்சென்று, அந்தப் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக தேதி கேட்கச் சென்றோம்.

அந்த சமயத்தில், இராசாராம், சத்தியவாணி முத்து, என்.வி. என்., ப.உ.சண்முகம், நாவலர் போன்றோர் அமர்ந்திருக்கிறார்கள். எங்கய்யா வந்தாய் என்று கேட்டார்கள்; அண்ணா அவர்களைப் பார்த்து தேதி கேட்க வந்திருக்கிறோம் என்று சொன்னேன். அண்ணா அவர்களுக்கு உடல்நிலை சரியில்லை, ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்லி, என்னை விரட்டியடித்து விட்டார்கள். நான் வீட்டிற்கு வந்துவிட்டேன்.

அடுத்த அரை மணி நேரத்தில், முதலமைச்சர் பயன்படுத்தும் மஞ்சள் நிற கார் - 7007 எண். அவருடைய கார் ஓட்டுநர் பெயர் சண்முகம். கோபாலபுரம் வீட்டு வாசலில் வந்து நின்றது; அந்த சமயம் நான் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். உள்ளே வந்த கார் ஓட்டுநர், ‘‘வா, தம்பி, அண்ணா அவர்கள் உங்களை அழைத்து வரச்சொன்னார்'' என்றார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை. உடனே அவரோடு சென்றேன். அண்ணா அவர்களைச் சந்தித்தபொழுது, “ஏன் வந்தாய், ஏன் சொல்லாமல் போனாய்?’’ என்று கேட்டார். “கீழே எல்லோரும் உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லி, என்னைஅனுப்பி விட்டார்கள்’’. “அவர்கள் கிடக்கிறார்கள், பரவாயில்லை - என்ன சொல்?’’ என்றார். “உங்களுடைய பிறந்தநாள் விழா நடத்தப்போகிறோம்; அந்த விழாவிற்கு நீங்கள் வர வேண்டும் என்று தேதி கேட்க வந்தோம். ’’சரி , தருகிறேன் போய்யா!’’ என்றார். “இல்லை, இல்லை இப்பொழுதே வேண்டும்’’ என்றேன்.

“என்ன உங்கப்பனைப் போன்று பிடிவாதம் பிடிக்கிறாய்’’ என்றார். அதற்குப் பிறகு தேதியும் கொடுத்தார். ஆனால், அந்த விழாவிற்கு அவரால் வர முடியாமல் போய் விட்டது. ஏனென்றால், ஆபரேசனுக்காக அமெரிக்காவிற்குச் சென்றுவிட்டார். அந்தக் குறை என் மனதில் இன்றைக்கும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

“அண்ணா, எம்.ஜி.ஆருடன் பழகிய இன்றைய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் மட்டும்தான்” : ‘இந்தியா டுடே’ புகழாரம்!

கேள்வி: அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர். போன்றவர்கள் வளர்த்துவிட்ட திராவிடம் இருக்கக் கூடிய தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக தி.மு.க., அ.தி.மு.க. என திராவிட கட்சிகள் தான் ஆட்சி செய்துகொண்டிருக்கின்றன. ஆனால், இப்பொழுது வெட்கப்படக் கூடிய ஒரு குற்றச்சாட்டு, பீகாரைப் போன்று பா.ஜ.க., ஒரு திராவிடக் கட்சியை உடைத்து, தங்களுக்கான இடத்தை இங்கே தேட நினைக்கிறார்களே?

மு.க.ஸ்டாலின்: முதலில் ஒரு திருத்தம். அ.தி.மு.க.வை திராவிட இயக்கத்தோடு நீங்கள் சேர்க்கக் கூடாது. ஏனென்றால், அது தமிழுக்கு விரோதமாக, தமிழர்களுக்கு விரோதமாக, தமிழ்நாட்டிற்கு விரோதமாக பி.ஜே.பி. என்னென்ன செய்து கொண்டிருக்கிறதோ - அதற்கெல்லாம் உடந்தையாக இருந்துகொண்டு இருக்கிறார்கள்.

அப்படி இருக்கும்பொழுது, அ.தி.மு.க.வை திராவிடக் கட்சியாக சேர்க்க முடியாது. வேண்டுமென்றால், அ.தி.மு.க என்ற கட்சியை உடைப்பதற்கு வேண்டுமானால் பா.ஜ.க. முயற்சி செய்து வெற்றி பெறலாமே தவிர, பி.ஜே.பி எந்தக் காலகட்டத்திலும், எந்த நேரத்திலும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என்பதுதான் என்னுடைய கருத்து.

banner

Related Stories

Related Stories